தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fire At Delhi Childrens Hospital: 7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்

Fire at Delhi Childrens Hospital: 7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்

Marimuthu M HT Tamil
May 26, 2024 02:16 PM IST

Fire at Delhi Hospital: சனிக்கிழமை நள்ளிரவு, டெல்லி மருத்துவமனையில் நடந்த விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். டெல்லி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து, மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்துக்கு பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Fire at Delhi Childrens Hospital: 7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்
Fire at Delhi Childrens Hospital: 7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

நாட்டின் தலைநகர் டெல்லியின் கிழக்குப்பகுதியில், விவேக் விஹாரில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏழு பச்சிளம் குழந்தைகள் இறந்தனர்.

7 குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்:

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, "டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து இதயத்தை நொறுக்குகிறது. இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்கள் பற்றித்தான் என் நினைப்புகள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மே 25ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில், டெல்லியில் பேபி கேர் நியூ பார்ன் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், விரைவில் அருகிலுள்ள மற்ற இரண்டு கட்டடங்களுக்கும் அது பரவியதாகவும் டெல்லி தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை:

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் இதயத்தை உடைக்கிறது. இந்த விபத்தில் அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுடன் நாம் அனைவரும் நிற்கிறோம். அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக உள்ளனர். இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை பாயும்’’ என்றார்.

மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் வசிப்பவர்கள் பலர் பராமரிப்பு மையத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். 

இதுதொடர்பாக உள்ளூர்வாசி இந்துஸ்தான் டைம்ஸிடம் கூறியதாவது, "தீ விபத்து ஏற்பட்டபோது சிலிண்டர்கள் வெடித்தன. சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது நேர்மாறாக ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த மையத்தின் உரிமையாளர்கள் சிலிண்டர் வியாபாரம் செய்து வந்தனர். பெரிய சிலிண்டர்களில் இருந்து சிறிய சிலிண்டர்களை நிரப்புவது வழக்கம். இந்த கவலையை இந்த மையத்தின் உரிமையாளர்களும் நிர்வாகமும் பகிர்ந்து கொண்டனர். நாங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் செய்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் பேட்டி:

டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யிடம் கூறுகையில், "நான் சுகாதார செயலாளரை அழைக்க முயற்சித்தேன். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. எதிர்காலத்தில் எந்த அதிகாரிகளும் இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபடாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுப்போம். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். இது தொடர்பாக டி.சி.பி.யிடம் பேசவுள்ளேன். உரிமையாளர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும்" என்றார்.

தீ விபத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் பி.டி.ஐ.யிடம் கூறினார்.

டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வெளியிட்டுள்ள பதிவில், "சுகாதாரத் துறைத் தலைவரான சுகாதாரத் துறை செயலாளருடன் என்னால் தொடர்பு கொள்ள முடியாததால், இந்த விஷயத்தில் விரைவான விசாரணையைத் தொடங்குவதற்காக இந்த குறிப்பின் நகலுடன் தலைமைச் செயலாளருக்கு அனுப்புகிறேன். பின்வருவனவற்றை உறுதிப்படுத்த நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்: 1. இந்த சம்பவம் குறித்து விரைவான விசாரணை. 2. இந்த அலட்சியத்திற்கு காரணமான அதிகாரிகள் அல்லது தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள். 3. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். (பரிஷ்டே திட்டத்தின் கீழ்) 4. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை துரிதப்படுத்துதல். 5. இந்த மையத்தை நடத்துபவர்களைப் பிடிக்க துரிதப்படுத்த வேண்டும்’’ என அதில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பேட்டி:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறுகையில், ’’பிறந்த குழந்தைகள் இறந்த செய்தி இதயத்தைத் துளைப்பதாக உள்ளது. இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள துயரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடவுள் வலிமையை வழங்கட்டும். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்ற குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்