திரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் மணல் சிற்பம் - அசத்திய சுதர்சன் பட்நாயக்
பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் கண்கவர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

குடியரசு தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும், வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது.
இதில், பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு 5 லட்சத்து 77 ஆயிரத்து 777 வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார். ஜூலை 25ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிரௌபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் கண்கவர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி நகரின் கடற்கரையில் திரௌபதி முர்முவின் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.