Death Anniversary of Kasturba Gandhi : அரசியல்வாதி, சமூக உரிமை போராளி! காந்தியின் மனைவி கஸ்தூர்பா நினைவு தினம் இன்று!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Death Anniversary Of Kasturba Gandhi : அரசியல்வாதி, சமூக உரிமை போராளி! காந்தியின் மனைவி கஸ்தூர்பா நினைவு தினம் இன்று!

Death Anniversary of Kasturba Gandhi : அரசியல்வாதி, சமூக உரிமை போராளி! காந்தியின் மனைவி கஸ்தூர்பா நினைவு தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Feb 22, 2024 05:15 AM IST

Death Anniversary of Kasturba Gandhi : அரசியல்வாதி, சமூக உரிமை போராளி! காந்தியின் மனைவி கஸ்தூர்பா நினைவு தினம் இன்று!

Death Anniversary of Kasturba Gandhi : அரசியல்வாதி, சமூக உரிமை போராளி! காந்தியின் மனைவி கஸ்தூர்பா நினைவு தினம் இன்று!
Death Anniversary of Kasturba Gandhi : அரசியல்வாதி, சமூக உரிமை போராளி! காந்தியின் மனைவி கஸ்தூர்பா நினைவு தினம் இன்று!

கஸ்தூர்பா கபாடியா, கோகுலதாஸ் கபாடியாவுக்கு பிறந்தவர். கோகுலதாஸ் பெரும் வணிகர், இவரது மனைவி விராஜ்குன்வெர்பா, இவர்கள் குஜராத்தின் போர் பந்தரைச் சேர்ந்தவர்கள்.

இந்நகரம் அரபிக்கடலோர நகரமாகும். இவரது குடும்பத்தினரும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் குடும்பத்தினரும் நண்பர்கள். காந்தி, கஸ்தூரிபாவைவிட சில மாதங்கள் இளையவர்.

இவரது 13 வயதில் இவரை காந்தி திருமணம் செய்துகொண்டார். இவர் ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் வீட்டில் வசித்தார். கஸ்தூர்பா, திருமணத்துக்கு முன் பள்ளி சென்றார். பின்னர் காந்தி அவரை பள்ளிக்கு அனுப்பினார்.

1885ம் ஆண்டு, இவர்களுக்கு ஒரு குழந்தை பின் இறந்தது. இவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் உயிருடன் இருந்த முதல் மகன் ஹரிலால், அவர் 1888ம் ஆண்டு பிறந்தார். அவர்களுக்கு அப்போது திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியிருந்தது.

ஹரிலால் பிறந்த பின் காந்தி உயர்கல்விக்காக லண்டன் சென்றுவிட்டார். கஸ்தூர்பா தனது குழந்தையுடன், வசித்தார். அவருக்கு மேலும் மணிலால் (1892), ராம்தாஸ்(1897), தேவ்தாஸ் (1900) என்று மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

1893ம் ஆண்டு காந்தி சட்டம் படிக்க தென் ஆப்பிரிக்கா சென்றபோதும் கஸ்தூரிபா இந்தியாவிலேயே தங்கினார். அவர் 1896ம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பினார். பின்னர் அடுத்த ஆண்டே அவர் குடும்பத்துடன் திரும்பி வந்தார். அவர்களின் கடைசி இரண்டு குழந்தைகள் அங்குதான் பிறந்தனர். பின்னர் காந்தி குடும்பத்தினர், 1901ம் ஆண்டு இந்தியா திரும்பினர். 1903ம் ஆண்டு மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்றனர்.

கஸ்தூரிபா தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது முதன்முதலில், அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டார். 1904 அவர் மோகன்தாசுக்கு உதவி செய்தார். மற்றவர்கள் டர்பன் அருகில் பீனிக்ஸ் ஒப்பத்தம் செய்ய உதவினார்கள்.

டர்பன், அங்கு மக்கள் வேலைகளை பகிர்ந்துகொண்டு தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே விளைவித்துக்கொண்டனர். அங்கு காந்தி குடும்பத்தினர் சில காலம் வசித்தனர். 1913ல் அவர் புலம்பெயர் இந்தியர்களை தென்ஆப்பிரிக்காவில் நடத்திய விதத்திற்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதாகி 3 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

1914ம் ஆண்டு காந்தி குடும்பத்தினர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்றுவிட்டு, பின்னர் 1915ம் ஆண்டு இந்தியா திரும்பினர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே கடுமையாக கஸ்தூரிபா காந்தி உடல் நிலை பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்பட்டார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர் சமூக சேவைகள் மற்றும் போராட்டங்களில் இந்தியா முழுவதிலும், காந்தியுடனும், மற்றவர்களுடனும் சென்று பங்கேற்றார்.

காந்தி சிறையில் இருந்தபோது அவரின் பணிகளை இவரே செய்தார். சில நேரங்களில் இவருக்க பிடிக்காத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். காந்திக்கு அவரது உடல் நலன் மீது அக்கறை இருந்தது. அவரின் அதிக நேரங்கள், பல்வேறு ஆசிரம பணிகளை செய்வதிலே இருந்தது.

தொடர்ந்து பல்வேறு பணிகள் மறறும் போராட்டங்களில் ஈடுபட்ட அவர், பலமுறை சிறையும் சென்றார். இறுதியாக அவர் வெள்ளையனே வெளியேறு இயக்த்தில் கலந்துகொண்டதற்காக கைதாகி புனே சிறையில் 1942ம் ஆண்டு அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. 1944ம் ஆண்டு ஆரோக்கிய குறைபாடுடன் புனேயில் தொடர் மாரடைப்பால் காலமானார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.