Death Anniversary of Babur : முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பேரரசர் பாபர் நினைவு தினம் இன்று!
Death Anniversary of Babur : பாபர், மொன்கோல் பூர்வீகத்தைக்கொண்ட பார்லாஸ் பழங்குடியினத்தில் இருந்து வந்தவர். பாபர் முகாலயர் என்று தன்னை அழைத்துக்கொண்டாலும், இவருக்கு துருக்கியர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. இவர் நிறுவிய சாம்ராஜ்யமும் துருக்கிய பராம்பரியங்களை ஒத்திருந்தது.
பாபர் என்றால் பெர்சிய மொழியில் புலி என்று பொருள். வட இந்திய முகலாய சாம்ராஜ்யத்தின் நிறுவுனர். ஆக்ராவை மையமாகக்கொண்டு வட இந்தியாவை ஆண்டவர். 1526ம் ஆண்டு முதல் 30 வரை பேரரசராக இருந்தார். 1483ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பிறந்தார். 1530ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இறந்தார்.
பாபர், மொன்கோல் பூர்வீகத்தைக்கொண்ட பார்லாஸ் பழங்குடியினத்தில் இருந்து வந்தவர். பாபர் முகாலயர் என்று தன்னை அழைத்துக்கொண்டாலும், இவருக்கு துருக்கியர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. இவர் நிறுவிய சாம்ராஜ்யமும் துருக்கிய பராம்பரியங்களை ஒத்திருந்தது.
மத்திய ஆசியாவில் பர்கானாவில் பிறந்தவர். தந்தை இறந்தபின் கடும் போராட்டம் மற்றும் ஓட்டங்கள் நிறைந்ததாக இருந்தது இவரது வாழ்வு. 1504ல் காபூலை வெற்றி கொண்டார்.
டில்லி சுல்தான் இப்ராஹீம் லோடியின் சித்தப்பா ஆலம் கானே காபூலுக்கு வந்து இவரை இந்தியாவின் மீது படையெடுத்து வர வற்புறுத்தினார். 1526ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பானிபட்டில் இப்ராஹீம் லோடியின் படைகளும் பாபரின் படைகளும் மோதின. படைபலம் அதிகம் இருந்தபோதும், பீரங்கிகள் இல்லாததால் லோடி இவரிடம் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாபர் டில்லி சுல்தான் ஆனார்.
அடுத்து ராஜபுத்திரர்களுடனான போர் ஆக்ராவுக்கு மேற்கே கவுனா என்ற இடத்தில் நடைபெற்றது. அந்த போரில் இவர் வென்றால் மதுவை தொடமாட்டேன் என இறைவன் மீது சூளுரைத்தார்.
இந்த தந்திரம் அவருக்கு போரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அடுத்த ஆண்டில் இவர் சந்தேரியையும், பீஹாரையும், வங்காளத்தையுமே வெற்றிகொண்டார். இவரது அரசு காபூலில் இருந்து வங்காளம் வரை பரவியிருந்தது.
இவரது மகன் ஹீமாயீன் படுத்த படுக்கையாக இருந்தார். இறைவனிடம் வேண்டிக்கொண்ட பாபர், தனது உயிரை எடுத்துக்கொண்டு, தனது மகனுக்கு உயிர்ப்பிச்சை நல்குமாறு இறைவனிடம் வேண்டினார். அதன்படி, அவரது மகன் உடல் நலன் தேறி, பாபர் உடல் நலன் குன்றி மாண்டுபோனார்.
48 ஆண்டுகளே இந்த பூமியில் வாழ்ந்தார். இவர் டெல்லி வீதிகளில் மாறு வேடத்தில் உலாத்தினார். அப்போது மதயானை கொல்ல முற்பட்ட குழந்தையை காப்பாற்றினார். அப்போது இவரது வேடம் கலைந்து பாபர் என மக்களுக்கு தெரிந்துவிட்டது.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவன் ‘உங்களை கொல்வதற்காக வந்தவன் நான். ஆனால் நீங்கள் உங்கள் உயிரை பணயம் வைத்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியதை பார்த்த பின்னர், ஒரு உயிரை கொடுப்பதுதான் வீரனுக்கு அழகு என்பதை உணர்ந்தேன்’ என கூறினார். அவனை மெய்காவலராக நியமித்தார் பாபர்.
பாபர் தனது வாழ்க்கை வரலாறை பாபர் நாமா என்ற பெயரில் துருக்கி மொழியில் எழுதியுள்ளார்.
டாபிக்ஸ்