Chandrababu Naidu: இனிதான் ஆட்டமே! சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் தந்தது நீதிமன்றம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chandrababu Naidu: இனிதான் ஆட்டமே! சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் தந்தது நீதிமன்றம்!

Chandrababu Naidu: இனிதான் ஆட்டமே! சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் தந்தது நீதிமன்றம்!

Kathiravan V HT Tamil
Oct 31, 2023 11:11 AM IST

“ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்”

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு (HT_PRINT)

ஆந்திராவில் கடந்த 2015 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, 10 சதவீத மாநில அரசு நிதி பங்களிப்பும், 90 சதவீத தனியார் பங்களிப்புடன் திறன் மேம்பாட்டு வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்காக ரூ.371 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக 2021-ல் ஊழல் தடுப்பு வாரியம் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவை வீட்டு சிறையில் அடைக்க கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவியது.

அவரது ஜாமீன் மனுக்கள் முன்னதாக நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரிய வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார காலம் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.