’என் மீது சிறுநீர் கழித்த நபரை இதுவரை நான் பார்த்ததே இல்லை’ ம.பி முதல்வர் காலை கழுவிய நபர் பேட்டியால் திடீர் திருப்பம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’என் மீது சிறுநீர் கழித்த நபரை இதுவரை நான் பார்த்ததே இல்லை’ ம.பி முதல்வர் காலை கழுவிய நபர் பேட்டியால் திடீர் திருப்பம்

’என் மீது சிறுநீர் கழித்த நபரை இதுவரை நான் பார்த்ததே இல்லை’ ம.பி முதல்வர் காலை கழுவிய நபர் பேட்டியால் திடீர் திருப்பம்

Kathiravan V HT Tamil
Jul 21, 2023 02:07 PM IST

”இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து வேறு நபரின் காலை கழுவி நாடகமாடியதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது”

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தவர் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரின் கால்களை அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் கழுவும் வீடியோ வைரல் ஆன நிலையில் அந்த வீடியோவில் உள்ள தஷ்மத் ராவத், பிரவேஷ் சுக்லாவை இதுவரை பார்த்தது இல்லை என கூறி உள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தது என்பதும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதும், பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மீது சிறுநீர் கழித்தவர் பாஜகவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பதும் தெரிய வந்தது.

பிரவேஷ் சுக்லாவின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது வீடு விதிகளை மீறி கட்டப்படுள்ளதாக கூறி உள்ளூர் நிர்வாகத்தால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.

பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லாவின் குடும்பத்திற்கு உதவ அகில இந்திய பிராமின் சமாஜ் என்ற அமைப்பு நிதி திரட்டியதுடன், வீடு இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தது.

இதற்கிடையே சிறுநீர் கழிக்கப்பட்டதாக கூறப்படும் ஷமத் ராவத்தை நேரில் அழைத்த அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் அவரது கால்களை கழுவியதுடன் அவருடன் சேர்ந்து மரங்களையும் நட்டார். இத்துடன் நிறுத்தாமல் தஷ்மத் ராவத் தனது நண்பர் என்றும் பேட்டி அளித்து இருந்தார்.

இதற்கு இடையே இச்சம்பவம் குறித்து பேசிய தஷ்மத் ராவத், சிறுநீர் கழித்ததாக கூறப்படும் நபர் நான் இல்லை என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரவேஷ் சுக்லாவை நான் பார்த்தது கூட கிடையாது. எனது உறவினர் ஒருவர் மோசடியாக பிரமான பத்திரத்தை என்னை கையெழுத்திட வைத்துவிட்டார் என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து வேறு நபரின் காலை கழுவி நாடகமாடியதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சுக்லாவை விடுதலை செய்ய வேண்டும் என தாவது வேண்டுகோள் விடுத்த நிலையில் சிறையில் உள்ள சுக்லாவை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட நாடமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.