தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cnx Opinion Poll 2024: பாஜகவுக்கு 290! திமுகவுக்கு 19! நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பில் அதிச்சி தகவல்!

CNX Opinion Poll 2024: பாஜகவுக்கு 290! திமுகவுக்கு 19! நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பில் அதிச்சி தகவல்!

Kathiravan V HT Tamil
Jul 30, 2023 11:47 PM IST

”பாஜக தற்போது வென்றுள்ள 303 தொகுதிகளின் பலம் தற்போது 290 தொகுதிகளாக குறையும் என்றும் தற்போதைய எதிர்க்கட்சியாக இருக்கு காங்கிரஸ் கட்சியின் பலம் 50 தொகுதிகளில் இருந்து அதிகரித்து 66 தொகுதிகளாக உயரும் ”

பிரதமர் நரேந்திர மோடி - இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள்
பிரதமர் நரேந்திர மோடி - இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி ஆகிய அமைப்புகள் மூலம் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை சி.என்.எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தற்போது வென்றுள்ள 303 தொகுதிகளின் பலம் தற்போது 290 தொகுதிகளாக குறையும் என்றும் தற்போதைய எதிர்க்கட்சியாக இருக்கு காங்கிரஸ் கட்சியின் பலம் 50 தொகுதிகளில் இருந்து அதிகரித்து 66 தொகுதிகளாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னெடுக்கும் இந்திய கூட்டணி 175 தொகுதிகளை வெல்லும் என்றும் மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 50 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 30 இடங்கள் வரை வெல்லும் என்றும் திமுக மட்டும் 19 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில வாரியான கருத்துக் கணிப்பு:-

உத்தரப்பிரதேசம் (80): என்.டி.ஏ-73 - இந்தியா - 7

பீகார் (40): என்.டி.ஏ 24 - இந்தியா 16

மகாராஷ்டிரா (48): என்.டி.ஏ 24 - இந்தியா 24

தமிழ்நாடு (39): என்.டி.ஏ 9 - இந்தியா 30

மேற்கு வங்கம் (42): என்.டி.ஏ 12 - இந்தியா 30

கர்நாடகா (28): என்.டி.ஏ 20 - இந்தியா 7 - மற்றவை 1

குஜராத் (26): என்.டி.ஏ 26 - இந்தியா 0

கேரளா (20): என்.டி.ஏ 0 - இந்தியா 20

ராஜஸ்தான் (25): என்.டி.ஏ 21 - இந்தியா 4

ஆந்திர பிரதேசம் (25): என்.டி.ஏ 0 - இந்தியா 0 - மற்றவை 25

ஒடிசா (21): என்.டி.ஏ 8 - இந்தியா 0 - மற்றவை 13

மத்திய பிரதேசம் (29): என்.டி.ஏ 24 - இந்தியா 5

தெலங்கானா (17): என்.டி.ஏ 6 - இந்தியா 2 மற்றவை 9

அசாம் (14): என்.டி.ஏ 12 - இந்தியா 1, மற்றவை 1

சத்தீஷ்கர் (11): என்.டி.ஏ 7 - இந்தியா 4

ஜார்க்கண்ட் (14): என்.டி.ஏ 13 - இந்தியா 1

ஹரியானா (10): என்.டி.ஏ 8 - இந்தியா 2

பஞ்சாப் (13): என்.டி.ஏ 0 - இந்தியா 13

டெல்லி (7): என்.டி.ஏ 5 - இந்தியா 2

உத்தரகண்ட் (5): என்.டி.ஏ 5 - இந்தியா 0

ஜம்மு & காஷ்மீர், லடாக் (6): என்.டி.ஏ 3 - இந்தியா 2 -மற்றவை 1

ஹிமாச்சல பிரதேசம் (4): என்.டி.ஏ 3 - இந்தியா 1

மணிப்பூர் (2): என்.டி.ஏ 0 - இந்தியா 2

பிற வடகிழக்கு மாநிலங்கள் (9): என்.டி.ஏ 9 - இந்தியா 0

கோவா (2): என்.டி.ஏ 2- இந்தியா 0

லடாக் தவிர்த்த பிற யூனியன் பிரதேசங்கள் (6): என்.டி.ஏ 4 - இந்தியா 2

மொத்த தொகுதிகள் 543, என்.டி.ஏ 318, இந்தியா 175, மற்றவை 50

IPL_Entry_Point

டாபிக்ஸ்