Chhattisgarh Exit Poll: சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் வெளியீடு; காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு
சத்தீஷ்கர் மாநிலத்தில் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுமுடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
5 மாநில தேர்தல் நடைபெற்றுமுடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் சத்தீஷ்கர் மாநிலத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மைப் பெற்று சத்தீஷ்கரில் ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி, இந்திய டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக - 36 முதல் 46 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும்; காங்கிரஸ் 40 முதல் 50 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் கணித்துள்ளது. மேலும், இந்தியா டிவி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி பாஜக 30 முதல் 40 தொகுதிகளையும், காங்கிரஸ் 46 முதல் 56 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும்; பிற கட்சியினர் 3 முதல் 5 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 48 முதல் 56 இடங்களையும்; பாஜக 32 முதல் 40 இடங்களையும் மற்ற கட்சியினர் 2 முதல் 4 இடங்களையும் கைப்பற்றும் எனவும் கணித்துள்ளது.
அதேபோல், ஜான் கி பாத் ஊடகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 42 முதல் 53 தொகுதிகளையும், பாஜக 34 முதல் 45 இடங்களையும், மற்றவை மூன்று இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிவி 9 பரத்வர்ஷ் கூறியுள்ள கருத்துக்கணிப்பின்படி, பாஜக 35 முதல் 45 தொகுதிகளையும், காங்கிரஸ் 40 முதல் 50 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் கூறியுள்ளது. அதேபோல் பிற கட்சியினர், அதிகபட்சமாக மூன்று தொகுதிகளைக் கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.