தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chartered Accountants Day 2024: ஜூலை 1 ஏன் பட்டய கணக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம்

Chartered Accountants Day 2024: ஜூலை 1 ஏன் பட்டய கணக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம்

Marimuthu M HT Tamil
Jul 01, 2024 08:11 AM IST

Chartered Accountants Day 2024: ஜூலை 1 ஏன் பட்டய கணக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்வோம்.

Chartered Accountants Day 2024: ஜூலை 1 ஏன் பட்டய கணக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம்
Chartered Accountants Day 2024: ஜூலை 1 ஏன் பட்டய கணக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் (Thinkstock/ Representative image)

Chartered Accountants Day 2024: இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய பட்டய கணக்காளர்கள் தினம் அல்லது CA தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நிதி தணிக்கை மற்றும் கணக்கியல் தொழிலுக்கான ஒரே உரிமம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு, இந்த பட்டயக் கணக்காளர்கள் தினத்தை கொண்டாடுகிறது.

ஜூலை 1 தேசிய பட்டய கணக்காளர் தினம்; இந்த நாளில்தான் 1949-ம் ஆண்டு Institute of Chartered Accountants of India (ICAI) உருவாக்கப்பட்டது. சுமார் 2.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய கணக்கியல் நிறுவனமாக இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் கருதப்படுகிறது.