6 States Bye Election: 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறு; புதுப்பள்ளியில் வாக்கினைப் பதிவுசெய்த சாண்டி உம்மன்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  6 States Bye Election: 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறு; புதுப்பள்ளியில் வாக்கினைப் பதிவுசெய்த சாண்டி உம்மன்!

6 States Bye Election: 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறு; புதுப்பள்ளியில் வாக்கினைப் பதிவுசெய்த சாண்டி உம்மன்!

Marimuthu M HT Tamil
Sep 05, 2023 11:34 AM IST

6 மாநிலங்களில் இன்று காலை 7 மணிமுதல் 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடியில் வாக்கினைப் பதிவுசெய்த சாண்டி உம்மன்
வாக்குச்சாவடியில் வாக்கினைப் பதிவுசெய்த சாண்டி உம்மன்

கேரள மாநிலத்தின் புதுப்பள்ளி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோசி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் டும்ரி, உத்தரகாண்டில் பாகேஸ்வர் மற்றும் திரிபுராவில் தன்கர், போக்ச நகர் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர் சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர்த்து, மீதமுள்ள 5 தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் உயிரிழந்திருந்தனர்.

இதனால், மொத்தமாக 7 தொகுதிகளில் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மற்றும் உயிரிழப்பு காரணமாக வெற்றிடமாக அறிவிக்கப்பட்டன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையமும் காவல் துறையும் மேற்கொண்டன. அதன் நீட்சியாக இன்று வெற்றிடமாக அறிவிக்கப்பட்ட 7 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அதேபோல் 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது.

கேரளமாநிலம், புதுப்பள்ளி தொகுதியில் மறைந்த முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலதுசாரி அணிகளும் வேட்பாளரை நிலைநிறுத்தியுள்ளது. இதனால் போட்டி கடுமையாகவுள்ளது. இந்நிலையில் சற்றுமுன், புதுப்பள்ளியில் உள்ள ஓர் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார், சாண்டி உம்மன். அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோசி தொகுதியில் பாஜகவுக்கும் சமாஜ்வாடிக்கும் இடையே போட்டி பலமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் டும்ரி தொகுதியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் பாஜக கூட்டணியைச் சார்ந்த வேட்பாளருக்கும் போட்டி பலமாக உள்ளது. இதுபோன்று பிறதொகுதிகளிலும் போட்டி பலமாகவுள்ளது. வரும் 2024-ல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.