Tamil Live News Updates: செஸ் உலககோப்பை இறுதிப்போட்டி - முதல் சுற்று ட்ரா
இன்றைய (22.08.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tue, 22 Aug 202303:57 PM IST
மேலும் 2 திமுக அமைச்சர்களுக்கு தலைவலி
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
Tue, 22 Aug 202301:57 PM IST
செஸ் உலககோப்பை இறுதிப்போட்டி - முதல் சுற்று ட்ரா
உலகக்கோப்பை செஸ் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரக்னானந்தா மற்றும் ரஷ்யாவின் மேக்னஸ் கால்சன் ஆகியோர் மோதிய முதல் சுற்று டிராவில் முடிந்தது
Tue, 22 Aug 202301:34 PM IST
இமாச்சல் நிலச்சரிவு - தமிழகம் 10 கோடி நிதி
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு 10 கோடி நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Tue, 22 Aug 202301:22 PM IST
கவுன்சிலர் கடத்தல் - குண்டாஸ் ரத்து
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் ரோஜா என்பவரை கடத்திய வழக்கில் குண்டர் அட்டத்தில் கைதான சுரேந்திரன், சந்தோஷ், நவீன் ஆகியோர் மீதான குண்டாஸ் ரத்து
Tue, 22 Aug 202311:53 AM IST
நாடார் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி தலைவர் ஆவது ஆளுநர் மறுக்கிறார் - ஆர்.எஸ்.பாரதி
ஒரு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் இதுவரை டி.என்.பி.எஸ்.சி தலைவராக வரவில்லை. எனவே சமூகநீதி நோக்கத்தோடு சைலேந்திர பாபுவை முதலமைச்சர் நியமித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக் கொள்வதற்கு மாறாக நிராகரித்துள்ளார் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
Tue, 22 Aug 202310:55 AM IST
காலை சிற்றுண்டி திட்டம் - முதலமைச்சர் அழைப்பு
காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்க எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
Tue, 22 Aug 202310:42 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் பாலமுருகன் கைது
Tue, 22 Aug 202310:22 AM IST
அதிமுக பொதுச்செயலாளர் யார்? - சசிகலா வழக்கு 30ஆம் தேதி விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு எதிராக வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது
Tue, 22 Aug 202309:45 AM IST
நியோமேக்ஸ் நிறுவனம் - முன் ஜாமீன்மனு தள்ளூபடி
நிதிநிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி செய்த நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
Tue, 22 Aug 202309:28 AM IST
திருமணம், கல்வி உதவித் தொகை தர உத்தரவு
வெளிநாட்டு பணியின் போது உயிரிழந்த தமிழர்களின் வாரிசுகளுக்கு திருமணம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு
Tue, 22 Aug 202309:23 AM IST
சந்திரயான் - 3 - புதிய புகைப்படம் வெளீயீடு
சந்திரயான் - 3விண்கலம் நிலவை நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
Tue, 22 Aug 202307:55 AM IST
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
கோயிலின் ஆகமவிதிகளை படித்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு
Tue, 22 Aug 202307:44 AM IST
பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் ஆன நிலையில் விசாரணை வரும் 29ஆம் தேதி ஒத்திவைப்பு
Tue, 22 Aug 202307:09 AM IST
சந்திரயான் -3 அப்டேட்
சந்திரயான் -3ன் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரையிறக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
Tue, 22 Aug 202307:02 AM IST
வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஆக.22 வரை 182.2 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் இவ்வாண்டு 167.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Tue, 22 Aug 202306:32 AM IST
அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்
செம்மண் குவாரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரி அமைச்சர் தரப்பில் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tue, 22 Aug 202305:49 AM IST
காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
கார்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 17,776 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 13,341 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,841 கனஅடி நீரும், கபினியில் இருந்து 2,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
Tue, 22 Aug 202305:31 AM IST
10 மாணவர்கள் கைது
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லூரியில் மோதல் ஏற்பட்டபோது வெடிவெடித்தது குறித்து 12 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 22 Aug 202304:55 AM IST
மீனவர்களிடம் நலம் விசாரிப்பு
நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் இலங்கை கடற்கொள்ளையர்களால் படுகாயமடைந்த மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Tue, 22 Aug 202303:58 AM IST
கோப்புகளைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
Tue, 22 Aug 202303:20 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tue, 22 Aug 202302:31 AM IST
3 நாள் பயணமாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
மூன்று நாள் பயணமாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டார். பிரதமர் மோடி. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
Tue, 22 Aug 202302:00 AM IST
சென்னையில் மிதமான மழை
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Tue, 22 Aug 202301:20 AM IST
நாகை மீனவர்களிடம் நடுக்கடலில் கொள்ளை
நடுக்கடலில் நாகை மாவட்ட 4 மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். திசைகாட்டு கருவி, செல்போன் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்.
Tue, 22 Aug 202301:19 AM IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 458வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.