தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bbc Did Not Pay Tax On Certain Remittances, Claims Income Tax After 3 Day Survey

BBC: வரி ஏய்ப்பு செய்த பிபிசி: வருமான வரித்துறை அளித்த முழு விளக்கம்!

Karthikeyan S HT Tamil
Feb 18, 2023 01:32 PM IST

Income Tax Raids in BBC: பிபிசியின் நிதிபரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பிபிசி - கோப்புபடம்
பிபிசி - கோப்புபடம் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது பிபிசியின் நிதி, தொழில், கணக்குப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பிபிசியின் நிதிபரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மத்திய வருமான வரித்துறை பிபிசி பெயரை குறிப்பிடாமல் வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 133ஏ விதிகளை மீறியிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, டெல்லி மும்பையில் உள்ள சர்வதேச செய்தி நிறுவனமான (பிபிசி) அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்நிறுவனம் ஆங்கிலம், இந்தி மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. விளம்பரங்கள் மூலம் வருவாய் வருகிறது. 

ஆங்கிலம் தவிர்த்து பிற இந்திய பிராந்திய மொழிகளின் செய்தி சேவையில் அந்நிறுவனம் ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்நிறுவனம் வரி செலுத்தவில்லை. இதன் அடிப்படையில் பரிமாற்ற விலை ஆவணங்கள் தொடர்பான பல்வேறு முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வெளிநாடுகளைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்களுக்கு பிபிசி அந்நிறுவனம் ஊதியம் வழங்கியிருக்கிறது. சட்டவிதிகளின் படி இந்த ஊதியத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், வரி செலுத்தப்படவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்களை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிறுவன ஊழியர்களின் வாக்குமூலம், டிஜிட்டல் நகல்கள் மற்றும் ஆவணங்கள் என முக்கிய ஆதாரங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஆய்வின் போது அதன் செய்தி சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்