Top 10 National-World News: முதல்வராக பதவியேற்ற அதிஷி முதல் இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம் வரை-டாப் 10 நியூஸ்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 National-world News: முதல்வராக பதவியேற்ற அதிஷி முதல் இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம் வரை-டாப் 10 நியூஸ்

Top 10 National-World News: முதல்வராக பதவியேற்ற அதிஷி முதல் இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம் வரை-டாப் 10 நியூஸ்

Karthikeyan S HT Tamil
Sep 21, 2024 07:04 PM IST

Tamil Top 10 News Today: டெல்லி முதலமைச்சரானார் அதிஷி, இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு, விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம் உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Top 10 National-World News: முதல்வராக பதவியேற்ற அதிஷி முதல் இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம் வரை-டாப் 10 நியூஸ்
Top 10 National-World News: முதல்வராக பதவியேற்ற அதிஷி முதல் இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம் வரை-டாப் 10 நியூஸ்

டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி (43) பதவியேற்றார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. இதன் மூலம் தற்போது இந்தியாவின் இளம் வயது முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டெல்லியில் சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித்துக்கு பிறகு மூன்றாவது பெண் முதல்வர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதுவரை இந்தியாவில் இளம் வயதில் முதலமைச்சர் ஆனவர் சாதனையை மாயாவதி(39) வைத்துள்ளார்.,

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 70% பேர் வாக்களித்துள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது.

‘அழிவுகரமான இதழியல்’

வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், இதனை‘அழிவுகரமான இதழியல்’ என்றும் சாடியுள்ளார்.

ஸ்கூட்டி மீது வாகனம் மோதி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா செக்டார் 25 பகுதியில் உள்ள மேம்பாலத்தில், ஸ்கூட்டி மீது வாகனம் மோதி விபத்து. ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண் தூக்கி வீசப்பட்டதில், மேம்பாலத்தின் நடுவில் தூணில் விழுந்து காயமடைந்தார். அப்பெண்ணையும், அவரைக் காப்பாற்ற தூணில் குதித்த இருவரையும் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளன.

என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது- ராகுல்காந்தி

இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்; உண்மையை சகிக்க முடியாததால் பாஜகவினர் என்னை மெளனமாக்க துடிக்கின்றனர். ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகளை கேட்க விரும்புகிறேன்; நான் கூறியதில் ஏதேனும் தவறு உள்ளதா? என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

"இதுதான் ஜனநாயகத்தின் மிகப் பெரிய பரீட்சை"

தனக்கு எதிரான வலுவான விமர்சனங்களை ஆட்சியாளர்கள் பொறுத்துக்கொண்டு அதை சுயபரிசோதனைக்கு உள்ளாக்குவதே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பரீட்சை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

காஸாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 21 பேர் பலி

பாலஸ்தீன பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரத்தில் உள்ள பள்ளிக்கூடமாக மாறிய தங்குமிடம் மீது சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலின் ராணுவம் ஹமாஸ் போராளிகளை குறிவைத்ததாக கூறியது.

கே.டி.ஆர் குற்றச்சாட்டு

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது மைத்துனர் ஸ்ருஜன் ரெட்டிக்கு ரூ.1,132 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கியதாக பாரத் ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் குற்றம் சுமத்தியுள்ளார். நகராட்சித் துறையில் ஒரு 'பெரிய ஊழல்' நடந்ததாகவும், முதல்வர் ரெட்டி தனது மைத்துனருக்கு ஒப்பந்தத்தை வழங்குவதன் மூலம் பொது சுகாதாரத் துறை மூலம் அதைச் செய்தார் என்றும் கே.டி.ஆர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பெருமிதம்

இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதி, வளம், வளர்ச்சிக்கான முக்கிய கூட்டமைப்பாக ‘குவாட்’ உருவெடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதுள்ள விமானப்படை தளபதி விவேக் ராம் செளதாரியின் பதவிக்காலம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைவதால் மத்திய அரசு புதிய தளபதியை நியமித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.