Apple Store Delhi: திறக்கப்பட்டது 2வது ஆப்பிள் ஸ்டோர்; டில்லியில் குவிந்த வாடிக்கையாளர்கள்!
Delhi Citywalk Mall: ஐபோன் உற்பத்தியாளர், உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக முதலீடு செய்ய விரும்புவதால் குக் தனது பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தியாவின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோரை டில்லியில் அதன் தலைமை நிர்வாகி டிம் குக் திறந்து வைத்து வாடிக்கையாளர்களை வரவேற்றார்.
டில்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோர், டெல்லியின் பல வாயில்களில் இருந்து உத்வேகம் பெறும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், செவ்வாயன்று மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோரை விட டில்லி சாகேத் ஸ்டோர் சிறியதாகும்.
டெல்லியில் உள்ள ஆப்பிள் சாகெட் ஸ்டோர், மும்பை ஸ்டோருடன் ஒப்பிடுகையில் பாதி அளவாகும். அங்கு நிறுவனம் மொத்த விற்பனையில் ஒரு பகுதியை வாடகையாக , அதாவது மாதம் ரூ 40 லட்சமாக செலுத்தும்.
டில்லியில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோரில் ஷாப்பிங் செய்ய, காலையிலிருந்தே ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அவர்களை ஒழுங்கு படுத்தும் பணி காலையில் இருந்து தொடர்ந்து நடந்தது வந்தது. மும்பையைப் போலவே டில்லியிலும் ஆப்பிள் ஸ்டோருக்கு வாடிக்கையாளர்களின் பெரிய ஆதரவு கிடைத்தது.
ஆண்கள், பெண்கள் என அனைவரும் காத்திருந்து ஷாப்பிங் செய்ய முயன்று வருகின்றனர். முதல் நாள் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபோன் உற்பத்தியாளர், உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக முதலீடு செய்ய விரும்புவதால் குக் தனது பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அரசாங்க வட்டாரங்களின்படி, ஐபோன் தயாரிப்பாளர் இந்தியாவில் உள்ள ஒப்பந்த உற்பத்தியாளர்களின் வேலைவாய்ப்புத் தளத்தை விரைவில் 2 லட்சமாக இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளது.
குக், ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு தனது முதல் பயணமாக, செவ்வாயன்று மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனைக் கடையைத் திறந்தார்.
குக் கடைசியாக 2016 இல் இந்தியாவுக்கு வருகை தந்தார், அப்போது ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனமானது நாட்டில் செயல்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 15 ஆண்டுகளில் ஆப்பிளின் வணிகத்தில் சீனா செய்ததைப் பிரதிபலிக்கும் நோக்கத்தில், தொழில்நுட்ப நிறுவனமான இந்தியாவின் பாரிய சந்தையை ஆப்பிள் நிறுவனம் கண்காணித்து வருகிறது.
குக் தனது பயணத்தின் போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரை சந்தித்தார்.
ஆதாரங்களின்படி, குக் இந்தியாவில் ஆப்பிள் தளத்தை விரிவுபடுத்த அரசாங்க ஆதரவை நாடியுள்ளார் என தெரிகிறது. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி இரு அமைச்சர்களுடனும் பெங்களூரில் உற்பத்தி வசதிகள் மற்றும் ஆப் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட் ஆக்சிலரேட்டர் பற்றி விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
டாபிக்ஸ்