’விரைவில் கைதாகிறாரா சந்திரபாபு நாயுடுவின் மகன்’ நர லோகேஷ் மீது சிஐடி வழக்கு!
”ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது”
அமராவதி இன்னர் ரிங் ரோடு ஊழல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷை வழக்கில் சேர்க்க உத்தரவிட கோரி பெயரிடக் கோரி ஆந்திர மாநில சிஐடி போலீஸார்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சிஐடி சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஒய்.என்.விவேகானந்தா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், நர லோகேஷ் பெயரை குறிப்பிட்ட ஊழல் தடுப்பு பணியகம் சிறப்பு நீதிமன்றம், ஆனால் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்னர் ரிங் ரோடு வழக்கில் நர லோகேஷை 14ஆவது குற்றவாளியாக ஆக சேர்க்க சிறப்பு ஏசிபி நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.
இன்னர் ரிங் ரோடு ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிஐடி குற்றம் சாட்டியுள்ளது.
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவரது மகன் நர லோகேஷ் மீதான வழக்கு அரசியல் ரீதியாக உற்றுநோக்க வைத்துள்ளது.
டாபிக்ஸ்