PM Modi Birthday :சேவை, அர்ப்பணிப்புக்கு அடையாளமாக மோடியின் வாழ்க்கை -அமித்ஷா
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi Birthday :சேவை, அர்ப்பணிப்புக்கு அடையாளமாக மோடியின் வாழ்க்கை -அமித்ஷா

PM Modi Birthday :சேவை, அர்ப்பணிப்புக்கு அடையாளமாக மோடியின் வாழ்க்கை -அமித்ஷா

Divya Sekar HT Tamil Published Sep 17, 2022 04:32 PM IST
Divya Sekar HT Tamil
Published Sep 17, 2022 04:32 PM IST

மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தால் இன்றைய புதிய இந்தியா, உலகின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

<p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</p>
<p>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா</p>

அதில், “இந்தியா முதலில் என்ற அணுகுமுறை, ஏழைகளின் நல்வாழ்வுக்கான உறுதி உள்ளிட்டவை மூலம் முடியாத பணிகளை கூட பிரதமர் மோடி சாத்தியமாக்கியுள்ளார். நல்ல நிர்வாகம்,வளர்ச்சி, தேசப்பாதுகாப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்தியாவை முதன்மை நிலைக்குக் கொண்டு செல்வது என்ற உறுதிப்பாட்டை பிரதமர் மோடி நிறைவு செய்திருக்கிறார்.

அவரது தலைமையின் மீது மக்கள் வைத்துள்ள முழு நம்பிக்கை மட்டுமே இதனை சாத்தியமாக்கி உள்ளது. பாதுகாப்பான, வலுவான, தற்சார்புள்ள புதிய இந்தியாவை உருவாக்கியுள்ள மோடியின் வாழ்க்கை, சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு அடையாளமாகவும் விளங்குகிறது. சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களிடம் நம்பிக்கை உணர்வை மோடி நிலை நிறுத்தியுள்ளார். இன்று சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் மோடியுடன் உறுதியாக நிற்கிறார்கள். மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவத்தால் இன்றைய புதிய இந்தியா, உலகின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. உலக தலைவராக தனது அடையாளத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். இது உலகத்தால் மதிக்கப்படுகிறது. அவரது ஆரோக்கியத்திற்கும் நீண்ட வாழ்வுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்.“எனத் தெரிவித்துள்ளார்.