Amit Shah Visit: 2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா!
புதிய நாடாளுமன்ற வடிவத்தில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வரும் நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற வடிவத்தில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையை இன்று தொடங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிற்பகல் 4 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கடற்படை முகாம் செல்கிறார். பிறகு சாலை வழியாக ராமேஸ்வரம் செல்கிறார். மாலை 5.45 மணியளவில் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பாஜகவின் என்மண் எண் மக்கள் நடை பயணத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். பின்னர் ராமேஸ்வரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதையடுத்து அக்கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதே விடுதியில் தங்கும் அவரை சனிக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். சாமி தரிசனத்திற்கு பின் காலை 7 மணிக்கு புறப்பட்டு தங்கும் விடுதிக்கு செல்கிறார்.காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜெ அப்துல்கலாம் நினைவுகள் இறப்பதில்லை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். இதனிடையே அரிச்சல் முனை பகுதிகிக் செல்லும் அவர் பகல் 12 மணிக்கு அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்திக்கிறார். 12.45 மணிக்கு விவேகானந்தர் நினைவில்லம் செல்கிறார். பின்னர் மண்டபம் முகாம் செல்லும் அவர் 1.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படுகிறார். பிற்பகல் 2.05 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு சென்றடையும் அமித்ஷா 2.45 மணிக்கு தில்லி செல்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அமித்ஷாவின் தமிழக வருகை அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்