India Vs PDA: ம.பி தேர்தல்.. தொகுதி பங்கீட்டில் உரசல்: இந்தியா கூட்டணியை குறிப்பிடாத அகிலேஷ் யாதவ்!
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையேயான தொகுதிப் பங்கீட்டுச் சண்டையின் மத்தியில், அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணி குறித்து குறிப்பிடாமல் ஒரு புதிய கூட்டணி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிடிஏ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் இடுகை ஒன்றைப் பகிர்ந்துள்ளார், இந்தியா கூட்டணி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டுச் சண்டைகளின் வெளிப்பாடு, இரண்டு கட்சிகளின் உயர் மட்டத் தலைவர்களுக்கு இடையேயான வார்த்தைப் போர், இந்தியா கூட்டணிக்கு இடையே உரசலை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்த தனது சமூக ஊடகப் பதிவில், எஸ்.பி என்னும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் PDA- என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தியுள்ளார். இந்தியா கூட்டணி பற்றி அவர் எதுவும் சுட்டிக்காட்டவில்லை.
அடுத்த மாதம் மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்தியக் கூட்டணிக்கு எந்த இடத்தையும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் இடையே விரிசல் தொடங்கியது.
