மைசூர் சாண்டல் சோப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்.. அந்த வாசனை இருக்கே.. மைசூர் சாண்டல் வரலாறு தெரியுமா?
Mysore Sandal Soap: மைசூர் சாண்டல் சோப்பு களத்தில் இறங்கிய பிறகு மிகப்பெரிய புரட்சியை மக்கள் மத்தியில் செய்தது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த சோப்பின் சிறிய வரலாறை இங்கே காண்போம்.

Mysore Sandal Soap: இயற்கையான பொருட்களை வைத்து மனிதர்கள் அனைவரும் நீராடி வந்தனர். அதன் பின்னர் சோப்புகள் தயாரிக்கப்பட்டு மக்கள் புழக்கத்தில் வந்தன. நிறுத்து உழைக்கும் சோப்புகள் மீது மக்கள் அதீத பிரியம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தில் லைஃப் பாய் சோப்பு இருந்தது. குளிப்பதற்கு ஏற்றவாறு நீடித்து உழைக்கக்கூடிய சோப்பாக லைஃப் பாய் சோப்பு இருந்தது.
அதன் பின்னர் களத்தில் இறங்கியது தான் மைசூர் சாண்டல் சோப்பு. இந்த சோப்பு களத்தில் இறங்கிய பிறகு மிகப்பெரிய புரட்சியை மக்கள் மத்தியில் செய்தது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த சோப்பின் சிறிய வரலாறை இங்கே காண்போம்.
மைசூர் சந்தன மரங்கள்
சந்தன மரங்கள் நமது இந்தியாவின் தெற்கு பகுதியில் மைசூர் பகுதிகளில் அதிகம் காணப்பட்டன. சந்தனம் மற்றும் மரக்கட்டைகள் என அனைத்தும் வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு மைசூர் சாம்ராஜ்யம் மிகப்பெரிய வருவாயை ஈட்டி வந்தது. திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கூட மைசூர் சந்தன கட்டைகள் அனைத்தும் சீனப் போன்ற மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளன.