தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Cake: ரொம்ப ஈசியா இருக்கும் - எதுவும் தேவையில்லை - வீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழக் கேக்!

Banana Cake: ரொம்ப ஈசியா இருக்கும் - எதுவும் தேவையில்லை - வீட்டிலேயே செய்யலாம் வாழைப்பழக் கேக்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 18, 2023 12:34 PM IST

15 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையாக வாழைப்பழத்தில் செய்துவிடலாம்.

வாழைப்பழக் கேக்
வாழைப்பழக் கேக்

ட்ரெண்டிங் செய்திகள்

ஓவன் மற்றும் குக்கர் ஏதுமில்லாமல் வாழைப்பழ கேக் செய்து சாப்பிட முடியும். ஆச்சரியமாக இருக்கின்றதா, சாதாரண நான் ஸ்டிக் பேன் இருந்தால் போதும் 15 நிமிடத்தில் டேஸ்டான வாழைப்பழக் கேக் செய்து சாப்பிடலாம்.

இந்த வாழைப்பழ கேக் செய்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறித்து இங்கே காணலாம்.

வாழைப்பழ கேக் செய்வதற்குத் தேவையான பொருட்கள்

  • பெரிய வாழைப்பழம் இரண்டு
  • சர்க்கரை தேவைக்கு ஏற்ப (குறைந்தது கால் கப்)
  • ஒரு டீஸ்பூன் காபித்தூள்
  • இரண்டு டேபிள் ஸ்பூன் பூஸ்ட்
  • ஒரு கப் கோதுமை மாவு
  • அரை ஸ்பூன் சமையல் சோடா
  • 3 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
  • அரை கப் காய்ச்சிய பால்
  • சிறிதளவு நெய்
  • தேவையான அளவு முந்திரிப்பருப்பு
  • தேவையான அளவு உலர் திராட்சை

வாழைப்பழக் கேக் செய்முறை

  • இந்த கேக் செய்வதற்கு முதலில் பெரிய வாழைப்பழம் இரண்டையும் எடுத்துக்கொண்டு அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட வேண்டும்.
  • பின்னர் அதனோடு கால் கப் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரைக்குப் பதிலாக விதித்த வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் சேர்த்தால் சற்று கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
  • இதனோடு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட் காப்பி தூள் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை சேர்த்துள்ள காரணத்தினால் இவை அனைத்தும் நன்கு அரை பட்டுவிடும். கட்டாயம் தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்கக் கூடாது.
  • பின்னர் ஒரு கப் கோதுமை மாவைச் சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த கோதுமை மாவில் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக கேக் செய்வதற்குக் கண்டிப்பாகச் சோடா உப்பு சேர்க்க வேண்டும் எனவே தவிர்க்காமல் அதனையும் சேர்த்து விடவும்.
  • பின்னர் இதனுடன் முன்னதாக அரைத்து வைத்துள்ள வாழைப்பழ பேஸ்ட்டை சேர்த்துக் கலந்து கொள்ளவும். வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய்யை மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • கடலை எண்ணெய்யாக இருந்தால் கேக் சுவையாக இருக்கும். இவை அனைத்தையும் கலந்து விட்ட பிறகு நன்கு காய்ச்சி ஆற வைத்த நிலையில் இருக்கும் பாலை ஒரு முறை கலந்து அதனோடு மிக்ஸ் செய்ய வேண்டும்.
  • ஒரு நான்ஸ்டிக் பேன் எடுத்து அதில் உட்புறமாகச் சுற்றிலும் எல்லா இடங்களிலும் நெய்யைக் கொஞ்சமாகத் தடவிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அனைத்தும் மிக்ஸ் செய்து கலவையில் இடித்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சைகளை அதன் மீது தூவி கொள்ள வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப தேவையான பருப்புகளையும் மற்றும் உலர் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அதன் பின்னர் அடுப்பைப் பற்ற வைத்து மீடியம் கைகளில் வைத்துக்கொண்டு அதன் மீது ஒரு தோசைக் கல்லை வைக்க வேண்டும். பின்னர் உன் கலவையைக் கொட்டி வைத்துள்ள பேனை அதன் மேலே வைக்க வேண்டும்.
  • பின்னர் அதனை மூடிவிட வேண்டும். அதன் மேலே ஏதாவது வெயிட் வைக்க வேண்டும். அதிகபட்சம் 15 நிமிடம் வரை வேக விட்டால் பஞ்சு போல வாழைப்பழ கேக் தயாராகிவிடும். அதனை அப்படியே மெதுவாக எடுத்து தட்டில் வைத்து வெட்டி குழந்தைகளுக்குப் பரிமாறலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

WhatsApp channel

டாபிக்ஸ்