Yam Fingers : சேனை கிழங்கு ஃபிங்கர்ஸ் – குழந்தைகள் குதூகலிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Yam Fingers : சேனை கிழங்கு ஃபிங்கர்ஸ் – குழந்தைகள் குதூகலிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

Yam Fingers : சேனை கிழங்கு ஃபிங்கர்ஸ் – குழந்தைகள் குதூகலிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Nov 07, 2023 05:29 PM IST

Yam Fingers : சேனை கிழங்கு ஃபிங்கர்ஸ், குழந்தைகள் குதூகலிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்.

Yam Fingers : சேனை கிழங்கு ஃபிங்கர்ஸ் – குழந்தைகள் குதூகலிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!
Yam Fingers : சேனை கிழங்கு ஃபிங்கர்ஸ் – குழந்தைகள் குதூகலிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்!

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

பூண்டு – 5 பல்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (கீறியது)

இஞ்சி – ஒரு இன்ச் (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

அரிசி மாவு – அரை கப்

பிரட் கிரம்ப்ஸ் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை – 1

மைதா மாவு – அரை கப்

சில்லி ப்ளேக்ஸ் – அரை ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சேனை கிழங்கை தோல் நீக்கி நன்றாக அலசிவிட்டு, சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நறுக்கி வைத்த கிழங்கையும் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ந்த மிக்ஸி ஜாரில், சோம்பு, மிளகு, பூண்டு, வெங்காயம், இஞ்சி, மிளகாய் தூள், பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ள வேண்டும்.

வெந்த கிழங்கை தண்ணீரில் இருந்து எடுத்து ஆறவைத்து மசிக்க வேண்டும். அதில் அரைத்த விழுதுகளை சேர்க்க வேண்டும். கூடவே மிளகாய் தூள், அரிசி மாவு, பிரட் கிரம்ப்ஸ் என அனைத்தும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து ஃபிங்கர் வடிவில் செய்துகொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு தட்டில் பிரட் கிரம்ப்சை போட்டு வைக்க வேண்டும்.

செய்து வைத்துள்ள ஃபிங்கர்களை மைதாவில் தோய்த்து, பிரட் கிரம்ப்ஸில் சேர்த்து, எண்ணெயில் பொரித்து எடுத்தால், யம்மி அண்ட் டேஸ்டி மட்டுமல்ல ஹெல்தியான சேனை கிழங்கு ஃபிங்கர்ஸ் சாப்பிட தயாராகிவிட்டது.

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் இந்த ஸ்னாக்ஸ் செய்துகொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.