World Mosquito Day: கொசு கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்.. தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி?
World Mosquito Day 2024: கொசு கடித்தால் மனித தோலின் எதிர்வினை கொசுவின் உமிழ்நீரில் இருக்கும் நச்சுகளின் விளைவாகும். கொசு கடித்த பிறகு என்ன செய்யலாம் என்பது இங்கே.

World Mosquito Day: கொசு கடித்த பிறகு என்ன செய்ய வேண்டும்.. தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி? (Pixabay)
'இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா' என நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறியது நாம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
அந்த தொல்லைதரும் கொசுக்கடியிலிருந்து நம்மைக் காப்பாற்ற புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தந்திரத்தையும் முயற்சிக்கிறோம், ஆனால் பயனில்லை. எரிச்சல், தோல் அரிப்பு மற்றும் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும்.
முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தம் தேவைப்படுவதால் பெண் கொசுக்கள் மட்டுமே கடிக்கின்றன. ஒருமுறை கடித்தவுடன் சம்பந்தப்பட்ட நபர் எரிச்சல், அரிப்பு, கடித்த பகுதி சிவப்பாக மாறும், உயரமாக மாறும் மற்றும் புடைப்புகளும் ஏற்படலாம்.