பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்.. எப்படி கண்டறிவது? தீர்வு என்ன?
குழந்தையை பெற்றெடுத்த பிறகு தாயின் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ் ஏற்படுகிறது.

ஒரு குழந்தையின் பிறப்பு தாய்க்கு மட்டுமல்ல, முழு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும். பல மாதங்கள் கவலையுடன் காத்திருப்புக்குப் பிறகு, பிரசவ அறையிலிருந்து இயற்கையாகவே குழந்தையின் அழுகை வருவது சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
புதிய விருந்தினர் வருகையால் வீடு முழுவதும் கொண்டாட்டம் நிறைந்து இருக்கும். இருப்பினும், சில சமயங்களில் தாயின் மனம் சில இடையூறுகளுக்கு உட்படுகிறது. அதை பற்றி எத்தனை பேர் கவலை கொள்கிறார்கள் என்றால் பெரிய கேள்விக்குறி தான் பதிலாக கிடைக்கும்.
போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்
குழந்தையை பெற்றெடுத்த பிறகு தாயின் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ் ஏற்படுகிறது. இந்த நிலை தோராயமாக 30 முதல் 80 சதவீத பெண்களுக்கு ஏற்படுகிறது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது பொதுவாக மூன்று முதல் 10 நாட்களுக்குள் தோன்றி ஓரிரு வாரங்களில் மறைந்துவிடும் நிலை.