உறவை குலைக்கும் வெள்ளைப் பொய்கள்; சின்ன பொய்கள்! ஏன் முற்றிலும் தவிர்க்கவேண்டும்?
உறவை குலைக்கும் வெள்ளைப் பொய்களையும், சின்னச்சின்ன பொய்களையும் நாம் ஏன் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
உங்கள் உறவை குலைக்கும் சிறிய பொய்களையும், வெள்ளைப் பொய்களையும் நீங்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும். அவை எத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். எந்த உறவிலும் நம்பிக்கை என்பது முக்கியம். முக்கியமாக காதல் உறவின் அடித்தளமாக நம்பிக்கை இருக்கவேண்டும். உறவில் சில நடவடிக்கைகள் நம்பிக்கையை குலைத்துவிடும். உங்களின் உணர்வு ரீதியான தொடர்பையும் துண்டித்துவிடும். உங்களை எதிர்மறை சிந்தனைகளை நோக்கி அழைத்துச் செல்லும். எனவே நீங்கள் உறவை தக்கவைக்க உண்மையை கையில் எடுத்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால், இந்த சிறிய பொய்கள் உங்கள் வாழ்வையே நாசமாக்கிவிடும். நீங்கள் ஒரு பொய்யை கூறிவிட்டால், அந்த பொய்யை காப்பாற்ற எண்ணற்ற பொய்களை கூறவேண்டும். எனவே பல பொய்களை தவிர்க்க முதல் பொய்யை கூறாமல் இருப்பதே சிறந்தது. இது காதல் உறவில் மட்டுமல்ல, எந்த இடத்திலும் இதுதான் நடக்கும். எனவே நூறு பொய்களுக்கு வழிவகுக்கும் அந்த ஒரு பொய்யை நீங்கள் தவிர்க்கவேண்டும். அதுதான் எந்த இடத்திலும் உங்கள் உறவுகள் வலுப்பெற உதவும்.
பாதுகாப்பற்ற உணர்வு
ஒருவர் உங்களிடம் பொய் உரைத்துவிட்டார் என்று தெரிந்தால், உங்களுக்கு அந்த இடத்தில் பாதுகாப்பு இருக்காது என்று பொருள். அவர்கள் மறைந்திருக்கும் விஷயம் என்னவென்று தேடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் அந்த உறவில் விரிசல்தான் ஏற்படும்.
உணர்வு ரீதியான நெருக்கம் தடுக்கப்படும்
நீங்கள் பொய்யுரைக்கும்போது உண்மையான உணர்வு ரீதியான தொடர்பில் இருக்க நீங்கள் மற்றவர்களை அனுமதிக்க மாட்டீர்கள். உங்களுக்கு உண்மையான உறவு இருக்காது. இதனால் உங்களின் நெருக்கம் குறையும், உங்களுக்கு இடைவெளி அதிகரிக்கும். எல்லைகள் வரையறுக்கப்படும். இது ஒரு ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்காது.
நம்பிக்கை குலையும்
சிறிய பொய்களை நீங்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தீர்கள் என்றால், அது உங்களின் நம்பிக்கையை மென்று விழுங்கிவிடும். இதனால் விரைவில் சந்தேகம் ஏற்படும். அவநம்பிக்கை வரும். இதனால் நீங்கள் உங்கள் இணையரையே நம்ப மாட்டீர்கள்.
மனக்கசப்பை உருவாக்கும்
சிறிய தொடர் பொய்கள் உங்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தும். இதனால் உங்கள் பார்ட்னர், அவமரியாதையாக உணர்வார்கள். உண்மையில்லாத உறவு நிலைக்காது.
உண்மை மங்கும்
சிறிய பொய்கள் உண்மையை மங்கச் செய்யும், இதனால் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில், சிக்கல் ஏற்படும். உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை புரிந்துகொள்ளாமல் உறவும் மங்கிவிடும்.
மரியாதை குறைவாக நடத்துவது
நீங்கள் உறவில் பொய்யுரைக்கும்போது, அது ஒருவரின் திறமையை மதிக்கவில்லை. அவரின் உண்மையை கையாளும் திறனுக்கு மதிப்பில்லை என்பதை காட்டி, இங்கு தன்னம்பிக்கையும் குறைந்து, நம்பிக்கையும் குலைந்துவிடுகிறது.
வளர்ச்சியைத் தடுக்கிறது
வளர்ச்சிக்கு அடிப்படையான காரணியே நேர்மைதான். சிறிய பொய்கள், திறந்த உரையாடலில், சிக்கல்களை உருவாக்கும். உறவில் பிரச்னைகளைக் கொண்டுவரும். இதனால் உறவில் வளர்ச்சி இருக்காது. தொய்வடைந்து முறிவுதான் ஏற்படும்.
முடிவெடுக்கும் திறனில் சிக்கலை உருவாக்குகிறது
சிறிய பொய்கள் ஒன்று சேர்ந்து இருவரிடையேயும், பெரிய மற்றும் கடினமான பிரச்னைகளை தோற்றுவிக்கும். முடிவுகள் எடுப்பதில் மற்றவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இருக்காது. நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது.
பிரிவு
ஒரே ஒரு பொய், பல பொய்களுக்கு வழிவகுத்து, நம்பிக்கையை குலைத்து, வளர்ச்சியைத் தடுத்து, தன்னம்பிக்கை குறைத்து என எத்தனை பிரச்னைகளை உறவில் கொண்டு வருகிறது பாருங்கள். தொடர் பொய்கள் உங்கள் உறவை இறுதியில் பிரிவுக்கு கொண்டுவந்துவிடும். தொடரந்து நம்பிக்கை குலையும்போது, அதை நீங்கள் மீண்டும் உருவாக்க முடியாது. இதனால் கடைசியில் வேறு வழியில்லை பிரிவுதான் உங்கள் உறவின் இறுதியாக இருக்கும். எனவே நேர்மை, உண்மை என்பதை அனைத்து இடங்களிலும், குறிப்பாக உறவில் கட்டாயம் பின்பற்றுங்கள். இல்லாவிட்டால் மாட்டிக்கொள்வீர்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்