தலைமுடி உதிர்வை தடுக்க சிறந்த வழிகளில் ஒன்றாக வெங்காயம் உள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கு வெங்காயம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 03, 2024

Hindustan Times
Tamil

தலைமுடி உதிர்வு, வளர்ச்சிக்கான இயற்கையான பொருளாக வெங்காயம் இருந்து வருகிறது

வெங்காயத்தில் கந்தகம் இடம்பிடித்துள்ளது. இவை கொலஜன் உற்பத்தியை அதிகரித்து தலைமுடி சேதமடைவதை தடுக்கிறது. அத்துடன் தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதுடன், தலைமுடி சார்ந்த பிரச்னைகளை நீக்குகிறது

உங்களது அன்றாட தலைமுடி பராமரிப்பில் வெங்காயத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

வெங்காய ஹேர் பேக்

வெங்காயத்தை நறுக்கி நன்றாக பிளென்ட் செய்து, ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து உச்சந்தலை மற்றும் வேர்களில் தேய்க்க வேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து, பின்னர் ஷாம்பூவால் தலைமுடியை அலச வேண்டும்

வெங்காய சாறு

வெங்காயத்தின் தோல்களை நீக்க அதை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு பிளெண்ட் செய்ய வேண்டும். பின்னர் அந்த பேஸ்டை ஜார் ஒன்றில் ஊற்றி குளிப்பதற்கு முன்பு இந்த வெங்காய் சாறு தேய்த்து தலைமுடியை ஷாம்பூவால் கழுவ வேண்டும்

வெங்காய எண்ணெய் ஸ்ப்ரே

வெங்காயத்தில் இருந்து சாறு எடுத்து ஜூஸ் போல் நன்கு மிருதுவாக அறைத்து, சம அளவில் இயற்கையான எண்ணெய் சேர்த்து நன்கு குலுக்கி இந்த கலவையை தலைமுடியில் தேய்க்கலாம். குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு இந்த ஸ்ப்ரேயை முடியில் பயன்படுத்தலாம்

வெங்காயத்தை தலைமுடியில் பயன்படுத்தும்போது அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் ஹேர் ஸ்பெஷலிஸ்டிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்

குருதி நெல்லியின் நன்மைகள்