World Contraception Day: உலக கருத்தடை தினம்! கருத்தடையின் முக்கியத்துவங்கள்!
World Contraception Day: உலகளவில் வாழும் இளைய தலைமுறையினரிடையே கருத்தடை குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை. இதன் காரணத்தால் தான் பல பிரசவ மரணங்கள் நிகழ்கிறது.

உலகளவில் வாழும் இளைய தலைமுறையினரிடையே கருத்தடை குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை. இதன் காரணத்தால் தான் பல பிரசவ மரணங்கள் நிகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு உலக கருத்தடை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கமாக இளைய தலைமுறையினர் இடையே கருத்தடை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் குறித்தான ஆரோக்கியத்தை பெற வைப்பதாகும்.
பெரும்பாலான நாடுகளில் பிரசவ இறப்புக்களாலும், எச்ஐவி போன்ற நோய் பாதிப்புக்கலாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இளம் தலைமுறையினராக உள்ளனர். மேலும் டீன் வயதில் கர்ப்பம் அடைந்து அதன் காரணமாக பல உடல் நலக் குறைபாடுகளை பெண்கள் சந்திக்க வேண்டியதாகியுள்ளது.
பெண்ணுக்கான உரிமை
ஒவ்வொரு பெண்ணும் அவளது உடல் சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை பெற்றுள்ளார். இருப்பினும் இந்திய சமுதாயத்தில் கருத்தடை போன்ற செயல்பாடுகள் தவறாக பார்க்கப்பட்டு வந்தன. இருப்பினும் அரசின் சட்டங்களால் கருத்தடை குறித்தான விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் அனைத்துக் பெண்களுக்குமான சம உரிமை, பாலின சமத்துவம் ஆகியவற்ற சாத்தியப்படுத்தம் நோக்கிலும் இந்த உலக கருத்தடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.