Diet: மத்திய தரைக்கடல் உணவுமுறை - எடை இழப்பு முதல் மாரடைப்பு தடுப்பு வரை நன்மைகள் ஏராளம்
மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் சமையல் பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்பட்ட மத்திய தரைக்கடல் உணவு, உடலையும் ஆன்மாவையும் சீராக்குகிறது.

மத்திய தரைக்கடல் நாடுகளின் பழங்கால உணவு முறைகளை அடிப்படையாகக் கொண்ட மத்திய தரைக்கடல் உணவுகள் தற்போது முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரியமில்லை. பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பயிறு போன்றவையே மத்திய தரைக்கடலில் அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்திய உணவுகளைப் போன்றே, காய்கறிகளை வைத்து மத்தியதரைக்கடல் உணவுகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.
"மத்திய தரைக்கடல் உணவு என்பது பாரம்பரிய உணவுப் பழக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இந்த சமையல் முறை மத்திய தரைக்கடல் நாடுகளைச் சுற்றியது. உடலையும் ஆன்மாவையும் கொண்டாடும் புதிய உணவாக இது இருக்கிறது" என்று ஊட்டச்சத்து நிபுணர் விதி சாவ்லா கூறுகிறார்.
மத்திய தரைக்கடல் உணவு செரிமான மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட உங்கள் ஆரோக்கியத்தின் பல அம்சங்களையும் அதிகரிக்கும். இந்த அற்புதமான உணவைப் பின்பற்றுவதால் குடல், மார்பகம், புரோஸ்டேட் சுரப்பி, வயிறு, சிறுநீர்ப்பை, தலை மற்றும் கழுத்து, நுரையீரல் மற்றும் கணைய புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.