தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss Tips : உங்கள் எடை குறைப்புக்கு கொழுப்பை எரிக்க உதவும் உணவு வகைகள்!

Weight Loss Tips : உங்கள் எடை குறைப்புக்கு கொழுப்பை எரிக்க உதவும் உணவு வகைகள்!

Priyadarshini R HT Tamil
Jul 26, 2023 12:37 PM IST

Weight Loss Tips : உங்கள் சரிவிகித உணவில் சில உணவு வகைகளை நீங்கள் சேர்த்தீர்கள் என்றால், அது உங்களின் எடைகுறைப்பு பயணத்தில் கொழுப்புகளை கரைக்க உதவும்.

எடையை குறைக்க உதவும் உணவு
எடையை குறைக்க உதவும் உணவு

ட்ரெண்டிங் செய்திகள்

கொழுப்பை எரிக்கும் உணவு வகைகள்

ஓட்ஸ் மற்றம் நட்ஸ்

ஒரு பவுல் ஓட்ஸ் மற்றும் நட் வகைகளை தேர்ந்தெடுத்து நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாம்கள் மற்றும் வால்நட்கள் சேர்த்துக்கொள்ளலாம். ஓட்ஸ்ல் பைபர் உள்ளது. அது கரெலின் தயாரிக்க உதவுகிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஒரு ஹார்மோனாக உள்ளது. நட்ஸ்களில் மோனோ சேச்சுரேட்டட் மற்றும் பாலி சேச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அது உங்களுக்கு வயிறு நிறைந்த எண்ணத்தை கொடுக்கும். அதனுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

யேகர்ட் மற்றும் பெரிகள்

யோகர்ட் மற்றும் பெரிகள் புரோட்டீன் பொருட்கள் நிறைந்த பால் பொருட்கள் உங்களுக்கு இரட்டை நன்மையை கொடுக்கின்றன. உங்கள் எடைக்குறைப்பு பயணத்திற்கு அது நன்மையை வழங்குகின்றது. இது புரதச்சத்து நிறைந்த உணவு. அது உங்கள் உடலில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, யோகர்ட்டில் உள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் கொழுப்பை உருவாக்கும் மனஅழுத்தம் தரும் ஹார்மோனை சரிசெய்து எடை குறைப்புக்கு வித்திடுகிறது. யோகர்ட்டுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெரிகளை சேர்த்து சாப்பிடும்போது, அது மன அழுத்தத்தை குறைக்கிறது. அது முழு உடல் ஆரோககியத்துக்கும் உதவுகிறது. எடை மேலாண்மைக்கும் உதவுகிறது.

பீநட் பட்டர் மற்றும் ஆப்பிள்

பீநட் பட்டர் மற்றும் ஆப்பிள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. கடலையில் ஜெனிஸ்டைன் மற்றும் ரெஸ்வரேட்டல் உள்ளது. அது அதிக கொழுப்பு படிவதை தடுக்கிறது. இதில் உள்ள மோனோசாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுக்பை குறைத்து பசியை கட்டுப்படுத்துகிறது. ஆப்பிளில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஒட்டுமொத்த சத்துக்கள் நிறைந்துள்ளது.

முட்டை மற்றும் குடை மிளகாய்

முட்டை சத்துக்கள் நிறைந்த உணவு, அது உடலை உறுதி செய்ய உதவுகிறது. குடை மிளகாயில் உள்ள வைட்டமின் சி மற்றும் கேப்சைசின் மற்றும் ஜெஸ்டி கிக் உங்களுக்கு வயிற்றுப்பகுதியில் கொழுப்பை கறைக்க உதவுகிறது. குடைமிளகாய் உங்களுக்கு பசியை குறைக்க உதவுகிறது.

அவக்கோடா மற்றும் கீரை வகைகள்

இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. அது கொழுப்பை குறைக்க உதவுகிறது. கீரைகளில் கலோரிகள் குறைவு. ஆனால் நார்ச்சத்து நிறைந்தது. அவகோடாவில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. அது சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்குகிறது. அவகோடாவை நீங்கள் பல்வேறு இனிப்புகள் மற்றும் காரத்துடனும் பயன்படுத்தலாம்.

டார்க் சாக்லெட் மற்றும் நட்ஸ்

டார்க் சாக்லெட்டில் கோகோ அதிகம் உள்ளது. அதில் நட்ஸ் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது அது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. டார்க் சாக்லெட்டில் உடல் எடையை குறைக்கும் பாலிஃபினால்ஸ் உள்ளது. அது கொழுப்பு செல்களை அழிக்கிறது. மேலும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஒமோகா 3 ஃபேட்டி ஆசிட் மெட்டபாலிச வளர்ச்சியை அதிகரித்து உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்