தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Water: அச்சச்சோ.. இந்த செயல்கள் செய்யும் போது தண்ணீர் குடிக்க கூடதா?

Water: அச்சச்சோ.. இந்த செயல்கள் செய்யும் போது தண்ணீர் குடிக்க கூடதா?

Aarthi V HT Tamil
Aug 09, 2023 12:30 PM IST

எந்தெந்த சந்தர்ப்பங்களில் தண்ணீரைத் தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தண்ணீர் நன்மைகள்
தண்ணீர் நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளது. உடற்பயிற்சியின் போது நமது உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் பலர் நிறைய தண்ணீர் குடிப்பார்கள். உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிப்பது உடல் வெப்பநிலையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும். இவை ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே உடற்பயிற்சி செய்த பிறகு 20 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. உடல் வெப்பநிலை இயற்கையாகவே குறைகிறது. உடல் வெப்பம் குறைந்த பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.

படுக்கைக்கு செல்லும் முன்

பலர் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் இரவு முழுவதும் தாகம் எடுக்காது என்பது நம்பிக்கை. ஆனால் தூங்கும் முன் அதிக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. தாகம் எடுத்தால் சிறிது குடிக்க வேண்டும்.

இல்லையெனில், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். இதனால் தூக்கக் கலக்கம் ஏற்படுகிறது. இரவில் தூங்கிய பின் சிறுநீரக செயல்பாடு குறையும். இந்த நேரத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தால், இரவில் சிறுநீரகம் சரியாக இயங்க முடியாமல் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சாப்பிடும் போது

பலரும் சாப்பிடும் போது கூட நிறைய தண்ணீர் குடிப்பார்கள். இப்படி தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு தேவையான உணவு கிடைக்காது. உணவு உண்ணும் முன் அரை மணி நேரம், உணவு உண்ட பிறகு அரை மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது.

உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை பாதிக்கிறது. குடல் செயல்பாடு குறைகிறது. எனவே உணவு உண்ணும் இடையிலும், உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும், உணவு உண்ட பிறகு அரை மணி நேரமும் தண்ணீர் அருந்தாமல் இருப்பது நல்லது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 தண்ணீர் நன்மைகள்

WhatsApp channel

டாபிக்ஸ்