Veg Momos : வெஜ்மோமோஸ்; குழந்தைகள் விரும்பி உண்ணும் ஸ்னாக்; வீட்டிலே செய்யலாம்!
Veg Momos : வெஜ்மோமோஸ்; குழந்தைகள் விரும்பி உண்ணும் ஸ்னாக்; வீட்டிலே செய்யலாம்!
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது ஸ்னாக்ஸ் வகைகள் மட்டும்தான். அதிலும் குறிப்பாக இதுபோன்றவற்றை அவர்கள் முயன்று பார்க்க விரும்புகிறார்கள். அவர்களுக்காக இதை வீட்டிலே செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க
மைதா – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
மோமோஸ் நிரப்ப தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 10 பல்
இஞ்சி – ஒரு இன்ச்
குடை மிளகாய் – பாதி (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய முட்டைக்கோஸ் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு – ஒரு ஸ்பூன்
வினிகர் – ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
மோமோஸ் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
தக்காளி – 3
காய்ந்த சிவப்பு மிளகாய் – 8
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2 பல்
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு
செய்முறை
வெஜ் மோமோஸ் தயாரிக்க முதலில் மாவு பிசைய வேண்டும். அதற்கு ஒரு கப் மைதா, தேவையான அளவு உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
மாவை பிசைந்த பின் அதை மூடி போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவேண்டும்.
அடுத்து மோமோஸ் நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
வெங்காயம் நிறம் மாறிய பின் நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள், வினிகர், கொத்தமல்லி இலை, சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி பின் இறக்கி வைகத்துவிடவேண்டும்.
அடுத்து பிசைந்து வைத்த மாவில் ஒரு சிறிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் தேய்த்து வைத்து செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.
செய்து வைத்த மாவில் மோமோஸ் கலவையை சேர்த்து அதனை முழுவதும் மூடி வைக்கும் படி அதனை வடிவமைத்துக்கொள்ளவேண்டும்.
செய்து வைத்த மோமோஸை ஒரு இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் அதை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
10 நிமிடம் வெந்த பின் சூடான மோமோஸ் தயார்
இதற்கு சட்னி செய்ய ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் விட்டு எட்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவைத்து கொள்ளவேண்டும்.
அடுத்து 3 தக்காளியை தண்ணீரில் சேர்த்து வேக வைத்து தோலை எடுத்து அதனை வெட்டி வைத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதனை சூடு ஏற்றி, பின் நறுக்கிய தக்காளி, பூண்டு, இஞ்சி வேகவைத்த காய்ந்த மிளகாய், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
சுவையான மோமோசும் அதற்கு தொட்டுக்க மோமோஸ் சட்னியும் தயார்.
நன்றி ஹேமா சுப்ரமணியன்.
டாபிக்ஸ்