தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vaginal Bleeding : ‘செக்ஸ்’க்கு பின் பெண்ணுறுப்பில் ரத்தம் வருகிறதா? – இவை காரணங்களாகலாம்! என்ன தீர்வுகள்?

Vaginal Bleeding : ‘செக்ஸ்’க்கு பின் பெண்ணுறுப்பில் ரத்தம் வருகிறதா? – இவை காரணங்களாகலாம்! என்ன தீர்வுகள்?

Priyadarshini R HT Tamil
Jul 24, 2023 10:31 AM IST

Vaginal Bleed duruing Sex : உங்களுக்கு பிறப்புறுப்பில் உடலுறவு கொண்டபின் ரத்தம் வழிகிறதா? அதை நிச்சயமாக நீங்கள் கவனிக்க வேண்டும். உடலுறவுக்கு பின்னர் பெண்ணுறுப்பில் ரத்தம் வழிவதற்கான காரணங்கள் என்ன?

பெண்ணுறுப்பில் உடலுறவின்போது ரத்தம் வருகிறதென்றால் அதற்கான தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்
பெண்ணுறுப்பில் உடலுறவின்போது ரத்தம் வருகிறதென்றால் அதற்கான தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

குறைந்தளவு, எப்போதாவது அல்லது வழக்கிற்கு மாறாக நடப்பதில் பிரச்னையில்லை. ஆனால் ஒருமுறைக்கு மேல் ஏற்பட்டால் அது நீங்கள் உடனே கவனிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

உடலுறவுக்கு பின் பெண்ணுறுப்பில் ரத்தம் வருவது எதனால்?

பெண்ணுறுப்பு காய்தல்

பெண்ணுறுப்பு காய்ந்திருப்பதும், பெண்ணுக்கு உடலுறவுக்குப் பின் ரத்தம் வருவதற்கு ஒரு காரணமாகிறது. பெண்ணுறுப்பில் சுரக்க வேண்டிய திரவம் போதியளவு சுரக்காததால், பெண்ணுறுப்பு காய்வது மற்றும் உடலுறவின்போது எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் பெண்ணுறுப்பில் உடலுறவின்போது ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

பெண்ணுறுப்பு காய்வதற்கு ஹார்மோன்கள் மாற்றமும் காரணமாகிறது. குறிப்பாக மெனோபாஸ் நாட்களில் ஈஸ்ட்ரோஜோனின் அளவு குறைகிறது. மற்ற காரணங்கள் பாலூட்டுவது, சில மருந்துகள், மனஅழுத்தம், வேறு மருத்துவ காரணங்களும் பெண்ணுறுப்பு காய்ந்து போவதற்கு காரணமாகிறது. திரவ வடிவிலான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்பேரில், உடலுறவின்போது பெண்ணுறுப்பில் பூசிக்கொண்டால் இந்தப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

பாலியல் தொற்றுகள்

பாலியல் தொற்றுகளும் பெண்ணுறுப்பில் ரத்தம் வடிவதற்கு காரணமாகின்றன. சல்மிடியா, கோனோரா, டிரைக்கோமோனியசிஸ், ஹெர்ப்ஸ் ஆகியவை கருப்பை வாயில் கட்டி ஏற்பட காரணமாகிறது. அதற்கு செர்விக்டிஸ் என்று பெயர். உடலுறவின்போது, கருப்பை வாயில் எரிச்சல் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

எனவே பாலியல் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பான உடலுறவு, அடிக்கடி தொற்றுகள் குறித்த பரிசோதனை ஆகியவற்றை செய்துகொள்ள வேண்டும். புதியவருடனோ அல்லது பலருடன் உடலுறவில் ஈடுபடும்போது பாதுகாப்ப அவசியம். இந்த செர்விக்டிக்ஸ் தொற்றுகளை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், இது பெண்ணுறுப்பில் ரத்தம் வருவதை குறைக்கிறது.

பாக்டீரியா தொற்று அல்லது ஈஸ்ட் தொற்றுகள்

பெண்ணுறுப்பில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் அல்லது ஈஸ்ட் தொற்றுகள் பெண்ணுறுப்பு திசுக்களில் வீக்கம், எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனாலும் உடலுறவின்போது ரத்தம் வருகிறது.

பெண்ணுறுப்பில் அதிகளவில் பாக்டீரியாக்கள் உருவாகும்போது இந்த தொற்று ஏற்படுகிறது. ஈஸ்ட் அதிகளவில் பெருகும்போது ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது. வழக்கத்திற்கு மாறான வெளியேற்றம், எரிச்சல், அரிப்பு, துர்நாற்றம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த தொற்றுகளுக்கு நிச்சயம் மருத்துவ சிகிச்சைகள் அவசியம் செய்ய வேண்டும். அப்போதுதான் உடலுறவின்போது ஏற்படும் ரத்தக்கசிவை அது தடுக்கிறது.

கருப்பை வாய் புற்றுநோய்

கருப்பை வாய் புற்று நோய் இருந்தால் உடலுறவுக்குப் பின் பயங்கரமான ரத்தக்கசிவு ஏற்படும். கருப்பை வாயில் அதிகளவிலான செல்கள் வளரும்போது கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உடலுறவின்போதும், பின்னரும் ரத்தம் வருவது கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

கருப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சையளிப்பது சிறந்தது. அடிக்கடி பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். முன்னரே கண்டுபிடித்துவிட்டால், வியாதியை குணப்படுத்துவதற்கு நல்லது.

எனவே எந்த பிரச்னை என்றாலும், உங்களின் மருத்துவரிடம் வெளிப்படையாக உங்கள் பிரச்னைகளை தெளிவுபடுத்தி தீர்வு காண்பது அவசியம்.

WhatsApp channel

டாபிக்ஸ்