Urad Dal Dosai : ஆண்மையை அதிகரிக்கும்! எலும்புகள் வலுப்பெற உதவும்! கருப்பு உளுந்து தோசை செய்வது எப்படி?
Urad Dal Dosai : ஆண்மையை அதிகரிக்கும்! எலும்புகள் வலுப்பெற உதவும்! கருப்பு உளுந்து தோசை செய்வது எப்பட
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 2 கப்
பச்சரிசி – 2 கப்
உடைத்த கருப்பு உளுந்தம்பருப்பு – அரை கப்
வெந்தயம் – 2 ஸ்பூன்
நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாக கலந்து 4 கப் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் கருப்பு உளுந்தம்பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின் ஊறவைத்தவற்றை தண்ணீரில் மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ளவேண்டும்.
முதலில் கருப்பு உளுந்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு தண்ணீர் தெளித்து தெளித்து 15 நிமிடங்கள் பொங்க பொங்க அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த கருப்பு உளுந்தை மாற்றிக் கொள்ளவேண்டும். பின் ஊறவைத்து களைந்த அரிசியை சேர்த்து கொரகொப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி நன்றாக அரைந்ததும் அரைத்த உளுந்த மாவோடு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும். அரைத்த மாவை மூடிவைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவேண்டும்.
பின்னர் மாவை கரண்டியால் நன்கு கலந்துக் கொள்ளவேண்டுடம்.
இரும்பு தோசைக்கல்லை சிறிது எண்ணெய் தடவி சூடாக்கி ஒன்றை கரண்டி மாவால் கனமான தோசைகளாக இடவேண்டும். ஒரு தேக்கரண்டி நல்லெணெய்யை சுற்றி ஊற்றி, தோசையின் கீழ்ப்புறம் சிவந்ததும் திருப்பிப் போட்டு சில நிமிடங்கள் வெந்ததும் எடுக்க வேண்டும்.
தேங்காய் சின்ன வெங்காயத்துவையல், எள்ளு மிளகாய்ப்பொடி மற்றும் சிறிது கருப்பட்டி வைத்து பரிமாற சுவை அள்ளும்.
கருப்பு உளுந்து
இந்தியாவில் உளுந்து ஒரு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாகக் கருதப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் இதை கட்டாயம் எடுத்துக்கொள்ள வைக்கிறது. இதை உணவில் சாப்பிடலாம். ஆயுர்வேத மருந்துகளிலும் கலக்கப்படுகிறது. இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
100 கிராம் உளுந்தில் 1.6 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 59 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 25 கிராம் புரதச்சத்து, 0.93 கிராம் பொட்டாசியம், 0.38 கிராம் சோடியம் மற்றும் 341 கலோரிகள் உள்ளது. இதில் கூடுதலாக கால்சியம், இரும்பு, வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
உளுந்தின் நன்மைகள்
உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உளுந்து உங்கள் செரிமான மண்டலத்துக்கு நல்லது ஏனெனில் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவ்விரு நார்ச்சத்துக்களும், செரிமானத்தை அதிகரிக்கின்றன. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை தடுக்கப்படுகிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்கிறது
உங்கள் உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது இரும்புச்சத்து. இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த ரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கின்றன.
இந்த ஆக்ஸிஜன் சப்ளைதான் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அனீமியா போன்ற கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் உடலுக்கு நன்மையளிக்கின்றன.
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும், உங்களை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது
உங்கள் இதயத்தை சூப்பர் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உங்களை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசிய சத்து உடலில் முறையான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கிறது.
இதன் மூலம் தமனி சுவர்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கிறது. உளுந்தை வழக்கமாக எடுத்துக்கொண்டால், எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
நீரிழிவு நோயின் நண்பன்
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தினமும் உளுந்தை சேர்த்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உளுந்து உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை சரியாக பராமரிக்கவும், உங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்கிறது
உங்கள் தலை முடி பொலிவிழந்து காணப்படுகிறதா? அதற்கு உளுந்தை அரைத்து, தயிருடன் கலந்து தலைமுடியின் கால்களில் பூசி சிறிது நேரம் ஊறவிடவேண்டும்.
பின்னர் மிருதுவான ஷாம்பூவில் தலையை அலசினால் தலைமுடி உறுதியாவதுடன், பளபளப்பாகவும் இருக்கும். உளுந்தில் உள்ள புரதம், ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.
உளுந்து உடல் எடையை குறைக்கிறது
உளுந்தில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் வயிறை நிறைந்த உணர்வுடன் வைத்து, இடையில் பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் நீங்கள் இடையில் சாப்பிடும் ஸ்னாக்ஸ் கட்டுப்படுத்தப்படுகிறது.
அதனால், உளுந்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது நீங்கள் இடையில் ஸ்னாக்ஸ் எடுத்துக்கொண்டு கலோரிகள் அதிகரித்துக்கொள்வதை தடுக்கிறது.
உங்கள் எலும்பை உறுதியாக்குகிறது
வயோதிகம் மற்றும் வாழ்வியல் முறை போன்ற காரணங்களால் உங்கள் உடலில் உள்ள எலும்பு வலுவிழந்து, பலவீனமாகிறது. உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், வலுவாக வைத்துக்கொள்ளவும் உங்கள் உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
உளுந்தில் இந்த சத்துக்கள் அனைத்தும் உள்ளது. அது உங்கள் எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி வலுவாக்குகிறது. மேலும் உங்களுக்கு எலும்பு குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. அதற்கு நீங்கள் உளுந்தை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மெனோபாஸ் காலங்களில் பெண்களின் எலும்புகள் மோசமடையும். இதனால் ஊட்டச்சத்து நிபுணர்கள், பெண்கள் உளுந்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது
உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மற்றும் நலம் உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது. உளுந்து சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை அடித்து வெளியேற்றுகிறது.
இதன் மூலம் நீங்கள நன்முறையில் சிறுநீர் கழிக்க உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. உங்கள் சிறுநீரகம் நன்றாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.
உங்கள் சருமத்துக்கு நல்லது
உளுந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்பு,ச்சத்து உடலில் ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரித்து உங்கள் சருமத்துக்கு இயற்கையாகவே நல்ல நிறத்தை வழங்குகிறது. இதனால் உங்கள் சருமம் பளபளக்கிறது. உளுந்தை அரைத்து உங்கள் சருமத்தில் பூசினால் சூரியஒளியால் ஏற்படும் நிறமாற்றம், முகப்பருக்களை சரிபடுத்துகிறது.
ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உதவுகிறது
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ஆண்மையின்மை, முன்னரே விந்து வெளியேற்றம் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உளுந்து உதவுகிறது.
உளுந்தில் பலவகை உணவுகள் செய்யலாம். குறிப்பாக நாம் தினமும் உண்ணும் இட்லி, தோசையில் அதிகமாக பயன்படுத்தப்படுவது உளுந்து. மேலும் இதில் லட்டு, கஞ்சி என பல வகை உணவுகளும் செய்யலாம். அனைத்து வகையிலும் உளுந்தை சேர்த்து ஊட்டம் பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்