Benefits of Jowar: வயிற்றுக்கு எந்த தொந்தரவும் கிடையாது - சோளம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பாருங்க
இதய ஆரோக்கியம், எலும்புகளை வலுப்படுத்துதல், எடை குறைப்பு, செரிமான பிரச்னை என பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட உணவாக சோளம் இருந்து வருகிறது. சோளத்தில் இருக்கும் சத்துக்கள் அவற்றால் பெறும் ஆரோக்கிய நன்மைகளையும் பார்க்கலாம்.

கோதுமை உணவுகள் போல் ஆரோக்கியம் நிறைந்த மாற்று உணவாக சோளம் இருந்து வருகிறது. வழக்கமான தானிய வகை உணவுகளில் இருந்து மாற்றாக அமையும் இந்த சோளம் சார்ந்த உணவுகளில் அதிக நார்ச்சத்து நிறைந்திருப்பதோடு, குளூட்டன் இல்லாத உணவாக உள்ளது.
பிட்னஸ் மீது அக்கறை செலுத்துபவர்கள் மத்தியில் மிகப் பிரபலமான உணவாக மாறி வருகிறது சோளம் சார்ந்த உணவுகள். அதிக அளவிலான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், மைக்ரோ ஊட்டச்சத்துகள் போன்றவை நிரம்பி இருப்பதால், இந்த தினை வகை உணவில் இருக்கும் உடல்நல ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. இதயத்துக்கு நன்மை தரும் இவை, ரத்த சர்க்கரை அளவ, வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
பல்வேறு வகையான சிறு தானிய வகைகளில் அதிகபேரால் சாப்பிடக்கூடிய உணவாக சோளம் இருந்து வருகிறது. வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடிய தானிய வகையாக சோளம் இருந்து வருகிறது.