Ulcer : அல்சரை அடித்து விரட்டும் மணத்தக்காளி கீரையில் கடையல் செய்யுங்க.. ஈஷியா செய்யலாம்.. விந்தணுக்களுக்கு வலிமை தரும்!-ulcer try this mandakkali spinach mixture to help cure ulcers - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ulcer : அல்சரை அடித்து விரட்டும் மணத்தக்காளி கீரையில் கடையல் செய்யுங்க.. ஈஷியா செய்யலாம்.. விந்தணுக்களுக்கு வலிமை தரும்!

Ulcer : அல்சரை அடித்து விரட்டும் மணத்தக்காளி கீரையில் கடையல் செய்யுங்க.. ஈஷியா செய்யலாம்.. விந்தணுக்களுக்கு வலிமை தரும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 30, 2024 06:45 AM IST

Ulcer : ஆண்களின் விந்தணுக்கள் வலிமையாக இருக்க விந்தணுக்களின் உயிர்ப்பு அவர்களது நரம்புகளின் வலுவிலும், இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்திலும் அடங்கியிருக்க இந்த மணத்தக்காளி கீரை மிகவும் உதவும். மேலும் பெண்களுக்கு கர்ப்பபையை வலுப்படுத்த உதவும்.

Ulcer : அல்சரை அடித்து விரட்டும் மணத்தக்காளி கீரையில் கடையல் செய்யுங்க.. ஈஷியா செய்யலாம்.. விந்தணுக்களுக்கு வலிமை தரும்!
Ulcer : அல்சரை அடித்து விரட்டும் மணத்தக்காளி கீரையில் கடையல் செய்யுங்க.. ஈஷியா செய்யலாம்.. விந்தணுக்களுக்கு வலிமை தரும்!

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு 10 பல்

தக்காளி - 1

பாசி பருப்பு - கால் கப்

கடலை பருப்பு - 3 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

வர மிளகாய் - 2

உப்பு

கறிவேப்பிலை

கொத்தமல்லி

பெருங்காயம்

மணத்தக்காளி கீரை கடையல் செய்முறை

ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, கடலை பருப்பை நன்றாக கழுவி எடுத்துகொள்ள வேண்டும. அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் 3 பச்சை மிளகாய் ஒரு தக்காளியையும் நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 10 பல் பூண்டையும் சேர்த்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது போதுமான அளவு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும். குக்கர் பிரஷர் அடங்கிய பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்த மணத்தக்காளி கீரையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். கீரை ஒரு 10 நிமிடம் வெந்த பிறகு அதை மண்சட்டிக்கு மாற்றிய பருப்பு மத்தை வைத்து நன்றாக கடைய வேண்டும். இப்போது கீரைக்கு தேவையான உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்தம்பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும். பின்னர் அதில் அரை ஸ்பூன் கடுகு மற்றும் சீரகத்தை சேர்த்து பொரிய விட்ட பின்னர் இரண்டு காய்ந்த மிளகாயையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சிவந்து வரும் போது பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். பின்னர் கொத்த மல்லி இலையை சேர்த்து தாளிப்பை கடையலுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் ருசியான மணத்தக்காளி கீரை கடையல் ரெடி. இந்த கடையல் சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் பயனுள்ள சமையல் குறிப்புகள் மற்றும் செய்முறை விளக்கம் குறித்து அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். மேலும் எங்களின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.