Deepavali Special: இந்த தீபாவளிக்கு தித்திக்கும் பாசிப்பருப்பு அல்வா ஈஷியா செய்யலாமா?
ருசியான பாசிப்பருப்பு அல்லவா தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.

என்னதான் தீபாவளிக்கு கடைகளில் ஸ்வீட் வாங்கினாலும் வீட்டில் ஸ்வீட் செய்தாலோ தனி ஜாலிதான். வாங்க வீட்டிலேயே ஈஷியாக அல்வா செய்வது எப்படி என பார்கலாம். ருசியான பாசிப்பருப்பு அல்லவா தித்திக்கும் சுவையில் செய்ய ரெடியா.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு
ரவை
பால்
சர்க்கரை
ஏலக்காய்
முந்திரி
பாதாம்
பிஸ்தா
நெய்
உப்பு
செய்முறை
ஒரு வாணலியில் ஒரு கப் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பாசிப்பருப்பு கருகி விடாமல் வாசம் வரும் வரை நன்றாக சிவக்க விட வேண்டும். பின்னர் ஒரு குக்கரில் வறுத்த பருப்பை சேர்த்து ஒரு கப் பாசிப்பருப்புக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.
ஒரு கடாயில் அரை கப் ரவையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். ரவை வறுக்கும்போது 2 ஸ்பூன் நெய் விட்டு சேர்த்து வறுக்க வேண்டும். ரவை நன்றாக வறுத்த வாசம் வரும் போது 2 கப் பால் சேர்த்து நன்றாக கலந்து வேக விட வேண்டும்.
ரவை வெந்த பிறகு அதில் இரண்டு கப் சர்க்கரையை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அதில் வேக வைத்து பாசிப்பருப்பை நன்றாக மத்து போட்டு கடைந்த அதை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து விட வேண்டும்.
நெய் தாராளமாக சேர்த்து கொள்ளலாம். அதில் ஒரு பிஞ்ச் அளவு உப்பு சேர்த்தால் சர்க்கரை அளவை தூக்கி தருவது போல் இருக்கும். நெய் விடு கிளறி விடும்போது சட்டியில் ஒட்டாமல் திரண்டு வர ஆரம்பிக்கும்போது அரை ஸ்பூன் அளவு ஏலக்காய் பவுடரை சேர்த்து கொள்ளலாம். அல்லது 4 ஏலக்காயை தட்டி சேர்த்து கொள்ளலாம்.
கடைசியாக முந்திரி பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை போன்ற நட்ஸ்களை தேவைக்கு ஏற்ப கலந்து கொள்ளலாம். விருப்பம் உடையவர்கள் நட்ஸ் களை நெய்யில் வறுத்து சேர்த்து கொள்ளலாம். அவ்வளவு தான் ருசியான பசிப்பருப்பு அல்லா ரெடி.
அரை மணி நேரத்தில் செய்து விடலாம். ஆனால் ருசி அருமையாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் செய்து தர கேட்பார்கள். இந்த ஆண்டு தித்திக்கும் தீபாவளிக்கு பாசிப்பருப்பு அல்வா செய்ய ரெடியா மக்களே.
குறிப்பு: சர்க்கரை சேர்க்க விரும்பாதவர்கள், வெல்லம், கருப்பட்டி, நாட்டு சக்கரை கூட கலந்த கொள்ளலாம். இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்