Udupi Senai Fry : உடுப்பி சேனைக்கிழங்கு வறுவல் – இப்படி செஞ்சு அசத்துங்க!
Udupi Senai Fry : உடுப்பி சேனைக்கிழங்கு வறுவலை இப்படி செஞ்சு அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
கிழங்கை தயார் செய்வது எப்படி?
சேனைக்கிழங்கு – கால் கிலோ
புளிக்கரைசல் – கால் கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கார்ன் ஃப்ளோர்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
(சேனைக்கிழங்கு இயற்கையிலேயே அரிக்கும் தன்மை கொண்டது. இதை நீங்கள் அப்படியே செய்தால் நாவில் அரிப்பு ஏற்படும். ஆனால் அந்த அரிப்பு தன்மை இல்லாவிட்டால் கறி சுவையில் உங்களை அசத்தும். எனவே எப்போது சேனைக்கிழங்கு வாங்கினாலும், அதை இரண்டு நாட்கள் தண்ணீர் சுண்ட வெளியில் காற்றாட வைக்க வேண்டும்.
பின்னர் அதை சுத்தம் செய்து, நீள வாக்கில் அல்லது சிறிய க்யூப்களாக என எந்த சைசில் வேண்டுமானாலும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். முதலில் ஒரு அடுப்பில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் வெட்டிய சேனை கிழங்குகள், உப்பு, புளித்தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு கார்ன் ஃப்ளோர், தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து, சேனைக்கிழங்கை அதில் சேர்த்து நன்றாக மேரியனேட் செய்ய வேண்டும். பின்னர் கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து, அது காய்ந்தவுடன் அதில் சேனைக்கிழங்கு துண்டுகளை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 8
இஞ்சி – ஒரு இன்ச்
பூண்டு – 8 பல்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – ஒரு கப்
(ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலே தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்கமால் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
பட்டை – 1
கிராம்பு – 4
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
ஏற்கனவே சேனைக்கிழங்கு துண்டுகளை நாம் தயார் செய்து வைத்துள்ளோம். மசாலாவும தயார்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.
அவை அனைத்தும் பொரிந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். (உப்பு சேர்க்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஏனெனில் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கிழங்கிலும், வேக வைக்க உப்பு சேர்த்துள்ளோம். அப்போது கிழங்கில் உப்பு சுவை ஏறியிருக்கும். எனவே மசாலாவுக்கு தேவையான ஒரு சிட்டிகை உப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ளவேண்டும்)
பின்னர் இதில் தயார் செய்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து கொஞ்சம் டிரையாகவே பொரித்து எடுக்க வேண்டும்.
சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
இதை சாம்பார், ரசம், தயிர் என எந்த சாத்துடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.
வெரைட்டி சாதங்களுக்கும் ஏற்ற சைட் டிஷ். இதை ஒருமுறை ருசித்துவிட்டால், இதன் சுவை நாவிலே ஒட்டியிருக்கும். எனவே அடிக்கடி சுவைக்க தூண்டும். பொதுவாக திருமண விருந்து நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சேனைக்கிழங்கு பொரியல் பரிமாறப்படும்.
டாபிக்ஸ்