Sleeping Disorder: தூக்கமின்மை பிரச்சனையா? தீர்வு சொல்லும் கனடா பல்கலைக்கழக ஆய்வு!
Sleeping Disorder: உலக அளவில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளில் ஒன்றாக தூக்கமின்மை இருக்கிறது. மேலும் இதற்கு மருத்துவ உலகில் சில தீர்வுகளும் உள்ளன.

உலக அளவில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளில் ஒன்றாக தூக்கமின்மை இருக்கிறது. மேலும் இதற்கு மருத்துவ உலகில் சில தீர்வுகளும் உள்ளன. தற்போது கனடா நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் தூக்கமின்மை குறித்தான தீர்வுகளை ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளது. இதன் வாயிலாக மூளையில் உள்ள செயல்திறன்களே நாம் தூங்குவதற்கு காரணமாகும். இந்த செயல்திறன்களை மாற்றியமைப்பதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனைகளை தீர்க்க முடியும் என தெரிய வந்துள்ளது.
தூக்கமின்மை கோளாறுகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சைகள் பற்றிய புரிதலை தெளிவாக ஆராயக்கூடிய வகையில் மூளையில் ஒரு பொறிமுறையை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இது கனடாவின் McGill பல்கலைக்கழகம் மற்றும் பதுவா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வு தொடர்பாக ஒரு நரம்பியல் தொடர்பான இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் படி முக்கியமான மூளை ஏற்பியான மெலடோனின் (MT1) எனும் வேதிப்பொருள் தூக்கம் வராமல் முழித்திருக்கும் விரைவான கண் இயக்க தூக்கத்திற்கு மாற்றாக செயல்படும் எனத் தெரியவந்தது. இதுவே நாம் தூங்கும் போது உண்டாகும் தெளிவான கனவு மற்றும் அத்தியாவசிய மூளை செயல்பாடுகளுடன் தொடர்புடையது.
ஆய்வு முடிவு
மூளையின் சிறிய மற்றும் முக்கியமான பகுதிகள் இந்த ஆய்வில் கண்காணிக்கப்பட்டன. மூளையின் இந்த பகுதி 'லோகஸ் கோரூலியஸ்' அல்லது 'ப்ளூ ஸ்பாட்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி நம்மை விழிப்புடனும் வைத்திருக்கும் ஒரு நரம்பியக்கடத்தியான நோராட்ரெனலின் உற்பத்தியை இயக்குகிறது. REM எனும் மூளை ஏற்பியானது உறக்கத்தின் போது, இந்த மூளைப் பகுதியை செயல்பட விடாமல் தடுக்கிறது.