Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 5 Food For Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 10, 2024 11:55 AM IST

Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான். இவற்றை அன்றாட உணவில் கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!
Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

உடலில் மிகவும் முக்கியமான மண்டலமாக செரிமான மண்டலம் உள்ளது. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளை செரிக்க வைத்து, கழிவுகளை வெளியேற்றி நமது உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுப்பது செரிமான மண்டலம் தான். நாம் சாப்பிடுவதால் மட்டும் நமக்கு சத்துக்கள் கிடைத்துவிடாது. அது உள்ளே சென்று நல்ல முறையில் செரிக்கப்பட்டு, அதில் இருந்து தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே உடலை வளர்க்க தேவையான ஒன்றாக செரிமான மண்டலம் உள்ளது. இது இன்றைய துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு பழக்கங்களால் கெட்டுவிடுகிறது. இதை சரிசெய்யவேண்டியது அவசியம்.

செரிமான மண்டலத்தை வலுப்புடுத்தும் உணவுகள்

செரிமான மண்டலத்தை நாம் கவனிக்காமல் விட்டால் நமது உடலில் உள்ள மொத்த உறுப்புக்களின் ஆரோக்கியமும் கெடும். பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட காரணமாகும். செரிமான மண்டலத்துக்கு உதவக்கூடிய 5 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொண்டு, அவற்றை கட்டாயம் சாப்பிட்ட உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருங்கள்.

பேரிக்காய்

நார்ச்சத்துக்கள் நிறைந்தது. வேறு எந்த பழங்களிலும் இல்லாத நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால் வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு பேரிக்காய் நல்ல உணவாகிறது. செரிமானதுக்கு உதவுகிறது.

தயிர்

நல்ல கிருமிகள் தயிரில் அதிகம் உள்ளது. எத்தனை கார உணவுகள் சாப்பிட்டாலும் உடன் தயிர் சாப்பிடுவது கட்டாயம் ஆகும். பாலுக்கு பதில் தயிரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சோம்பு

உணவு உண்டபின் இதை எடுத்துக்கொள்ளலாம். இதை மென்று சாப்பிட உங்களுக்கு சிரமமாக இருந்தால், சோம்பு, சீரகம் சமஅளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. தினமும் கட்டாயம் இரவில் வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அது உங்கள் உடல் நாள் முழுவதும் சாப்பிட்ட காலையில் கழிவை வெளியேற்ற உதவுகிறது.

பப்பாளி

பப்பாளில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இது பெண்களுக்கு மிகவும் நல்லது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.