Top 10 Vitamin B 12 Rich Foods : வைட்டமின் பி12 அதிகம் உள்ள 10 உணவுகள் இவைதான்! எடுத்துக்கொண்டு பலன்பெறுங்கள்!
Top 10 Vitamin B 12 Rich Foods : வைட்டமின் பி12 அதிகம் உள்ள 10 உணவுகள் என்னவென்று தெரிந்துகொண்டு அவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு பலன்பெறுங்கள்.
பல வேலைகளை செய்யும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வைட்டமின் பி 12 குறித்து பேசுவோம்
வைட்டமின் பி 12 முக்கிய நரம்பியல் செயல்கள், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் டிஎன்ஏ தொகுப்பு என அனைத்துக்கும் வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி 12 அதிகம் நிறைந்ம சில உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதை எடுத்துக்கொண்டு உங்கள் உடலுக்கு தேவையான பி12 ஐ கொடுங்கள்.
பால்
இந்திய உணவுகளில் பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் பி 12 சத்து அதிகம் உள்ளது. எனவே உங்கள் உணவில் பாலை பருகுவதை பழக்கமாகக் கொண்டால், அது உங்களுக்கு பி 12 மற்றும் பல்வேறு சத்துக்களை வழங்குகிறது. இதை பருகவும் செய்யலாம் அல்லது கீராகவும், மற்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலுக்குத் தேவையான பி 12 அளவையும் கொடுக்கிறது.
இறைச்சி
சிக்கன் போன்ற பல்வேறு வகை இறைச்சி உணவுகள் உங்களுக்கு வைட்டமின் பி 12 சத்தைக் கொடுக்கிறது. இந்திய உணவுகளில் இறைச்சி, பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதை கிரேவியாகவும், கபாப் ஆகவும் செய்து உண்ணப்படுகிறது. இதை பல்வேறு வகைகளிலும் நாம் எடுத்துக்கொள்வது நமது உடலில் பி 12 அளவை அதிகரிக்க உதவுகிறது.
முட்டை
முட்டையில் அதிகளவில் வைட்டமின் பி 12 சத்துக்கள் உள்ளது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் முட்டை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. முட்டை குருமா, பொரியால், வறுவல், வேகவைத்து என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக முட்டையை காலை உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். அது உங்கள் உடலுக்குத் தேவையான பி 12 ஐக் கொடுக்கிறது. இதில் அதிக தரமான புரதங்களும் உள்ளது.
தயிர்
தயிர் அல்லது யோகர்ட் இந்திய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் உணவுகளில் ஒன்றாகும். இதில் வைட்டமின் பி 12 சத்து அதிகம் உள்ளது. இதை நீங்கள் அப்படியேவும் சாப்பிடலாம், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். ரைத்தா போன்ற பாரம்பரிய உணவுகளை செய்து சாப்பிடவேண்டும். இது செரிமான ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
பன்னீர்
பன்னீர் என்பது ஒரு வகை சீஸ் ஆகும். இது அதிளவில் பயன்படுத்தப்படும் பால் உணவுகளுள் ஒன்று. இதில் வைட்டமின் பி12 சத்து அதிகம் உள்ளது. சைவ உணவுகளுள் இது முக்கிய உணவாக உள்ளது. பன்னீர் பட்டர் மசாலா, பாலக் பன்னீர் மற்றும் பல்வேறு உணவுகளை செய்து சாப்பிடலாம். மேலும் அது சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
ஃபோர்டிஃபைட் தாவர அடிப்படையிலான பால்
ஃபோர்டிஃபைட் தாவர அடிப்படையிலான பால், சோயா அல்லது பாதாம் பால் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இது இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது. இந்த பாலில் வைட்டமின் பி 12 சத்துக்கள் உள்ளது. வீகன் டயட் அல்லது சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்பவர்களுக்கு இவை சிறந்த தேர்வாகும்.
சோயா பொருட்கள்
சோயாவைப் பயன்டுத்தி செய்யப்படும் உணவுகள், டோஃபூ, சோயா பால், இவற்றில் வைட்டமின் பி 12 சத்து உள்ளது. இதை நீங்கள் சைவ உணவுகளுடன் எடுத்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் பி 12 தேவையை பூர்த்தி செய்துவிடுகிறது.
கிரீக் யோகர்ட்
கிரீக் யோகர்ட், இந்தியாவில் அதிகம் கிடைக்கும் உணவுகளுள் ஒன்றாக உள்ளது. இதில் வைட்டமின் பி 12 சத்து உள்ளது. இதை நீங்கள் ஸ்னாக்ஸாகப் சாப்பிடலாம் அல்லது நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் பல்வேறு உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். இது வழக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் யோகர்டுக்கு சிறந்த மாற்று ஆகும். இதை எடுத்துக்கொள்வது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
காளான்
காளான், வைட்டமின் பி 12 இயற்கையாக நிறைந்த ஒரு உணவுப்பொருள் ஆகும். உங்கள் உணவில் காளானை அதிகம் சேர்ப்பது உங்கள் உடலுக்குத் தேவையான பி 12 தேவைகளை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக சைவ உணவுகள் மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு இது சிறந்தது.
காய்கறிகள்
காய்கறிகளில் குறைந்த அளவிலான வைட்டமின் பி 12 உள்ளது. விலங்கு உணவுகளில்தான் வைட்டமின் பி 12 சத்து அதிகம் உள்ளது. எனவே சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்கள் அவர்களின் வைட்டமின் பி 12 தேவைக்கு, சில ஃபோர்டிஃபைட் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்