Top 10 August Tour Spots : மாத இறுதியைக் கொண்டாடிவிடுங்கள்; ஆகஸ்டில் சுற்றுலா செல்ல ஏற்ற 10 இடங்கள் இதோ!
August Tour Spots : மாத இறுதியைக் கொண்டாடிவிடுங்கள்; ஆகஸ்டில் சுற்றுலா செல்ல ஏற்ற 10 இடங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை சென்று மகிழலாம்.
பயணம் பிடித்தவர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் ஏற்றது எனலாம். இந்த மாதத்தில் சுதந்திரதினம், ரக்ஷா பந்தன் மற்றும் ஜென்மாஷ்டமி என பண்டிகைகளும், விடுமுறைகளும், நீண்ட வார இறுதிகளும் வரும். இந்தாண்டும், நீங்கள் நீண்ட வார இறுதிக்கு திட்டமிட ஏற்ற இடங்கள்.
ஆகஸ்ட் 24 முதல் 26 வரை நீண்ட வார இறுதிக்கு நீங்கள் எங்கு செல்லாம் என யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கு ஏற்ற இடங்களை இங்கு பட்டியலிடுகிறோம்.
முசோரி மற்றும் லாண்டோர், உத்ரகாண்ட்
டெல்லியில் இருந்து 7 முதல் 8 மணி நேரத்திற்குள் எட்டிவிடும் இடம்தான் முசோரி, அதற்கு அருகில் உள்ள லாண்டோருக்கும் சேர்த்தே சென்றுவிடலாம். இந்த மாதத்தில், மலைகளின் ராணி மேகங்கள் சூழ பசுமை நிறத்தில் சொர்க்கம்போல் காட்சியளிக்கும். லாண்டோரில் உள்ள தனிமை உங்கள் மனதுக்கு அமைதியைத்தரும். முசோரியும், மால் ரோடும், மலைப்பிரதேசங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடங்கள்.
பூக்கள் பள்ளத்தாக்கு, உத்ரகாண்ட்
வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற மலையேறும் இடம்தான் இந்த பூக்கள் பள்ளத்தாக்கு. நீங்கள் இயற்கையுடன் இணைய ஒரு வாய்ப்பு கிட்டும். மூர்ச்சையாக்கும் திரில் நிறைந்த பயணமாக இருக்கும். மலைபேசும் மொழியை கேட்கலாம். பூக்கள் பள்ளத்தாக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது. எண்ணற்ற செடிவகைகளைக் கொண்ட ஏறுவதற்கு மிதமான, உங்களை ஆச்சர்யமடையவைக்கும் வ்யூகளைக் கொண்டது.
கோவா
கோவாவில் இது மழைக்காலம், அதனால் சிறு துளிகளிடையே நீங்கள் மகிழ்ந்திருக்கலாம். கோவாவில் எப்போது சுற்றுலா சீசன்தான். தென்னிந்தியாவில் இருந்து எளிதாக எட்டிப்பிடித்துவிடலாம். மழையிடும் ஆடும் சொர்க்கமாகவே கோவா இருக்கும். எண்ணற்ற நினைவுகளை அள்ளி வரலாம். தீவுகளில் சைக்கிள் பயணம், வெறிச்சோடி காணப்படும் பீச்கள், நீண்ட சாலைகளில் செய்யும் பயணங்கள், மழைக்கு இதமான சூடான பானங்களை அருந்திக்கொண்டே கோவாவைக் கொண்டாடலாம்.
மால்ஷெஜ் காட்
மும்பையில் இருந்து புனேவுக்கு காரில் செல்லும் வழியில் உள்ளது. அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த இடம். மழைக்காலத்தில் இந்த சாலைகளில் பயணிப்பதே அலாதியானது. நீர்வீழ்ச்சிகளும், இயற்கை காட்சிகளும், உங்களை திக்குமுக்காட வைக்கும்.
குர்ஷியோங்
குர்ஷியோங்க, என்பது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய அழகான கிராமம். இங்கு ஆண்டு முழுவதுமே ஒரு இதமான காலநிலை நிலவும். குறிப்பாக மழைக்காலத்தில் இதன் தேயிலை தோட்டங்களிலும், பனிபடர்ந்த நிலப்பரப்புகளிலும், பசுமை போர்த்திய வயல்வெளிகளிலும், நீங்கள் மனதை தொலைப்பீர்கள். டார்ஜிலிங் மற்றும் சிலிகுரிக்கு அருகில் உள்ள அழகிய இடம். இங்கு கூட்டம் நிறைய இருக்காது.
கலிம்போங்க்
மூர்சையடைச்செய்யும் வ்யூவ்களால், இந்த இடம் புகழ்பெற்றது. இதன் நீர்வீழ்ச்சிகளும், இயற்கை காட்சிகளும், கலிம்போங்கை சூடான கோடையிலும், இதமாக வைத்திருக்கும். இந்த இடம் கிழக்கு இமயமலைத்தொடர்களில் உள்ளது. மழைக்காலத்தில் இந்த இடத்தின் அழகு மேலும் மிளிரும்.
கூர்க்
ஆகஸ்டில் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களுள் கூர்கும் ஒன்று, பச்சை பசுமையை நீங்கள் பார்க்கும்போது உங்களின் ஐம்புலன்களுக்கும் இதமளிக்கும். மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள சுற்றுலாத்தலம். பனிபோர்த்திய மலைகளும், தேயிலை, காபி தோட்டங்களும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். பள்ளத்தாக்குகளும், அருவிகளும், உங்கள் மனதை மயக்கும். சவாலான மலைப்பாதைகள், சோம்வார்பேட், கோணிகோபால் போன்ற இடங்களும் உங்களை கவர்ந்து இழுக்கும்.
சிக்மகளூர்
சிக்மகளூர் தக்காண பீடபூமியின் மேல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள இடம். இது மழைக்காலத்தில் மலரும் காபி தோட்டங்களுக்கு பிரபலமானது. இந்த இடங்கள் உங்கள் சுற்றுலா பட்டியலில் கட்டாயம் இருக்கவேண்டும். இங்கு மலைகள், தாழவான மலைகள், பலவகை காய்கறிகள், பனிசூழ் நிலங்கள் என பார்ப்பவர் கண்களை மயக்கும். இங்கெல்லாம் சென்று ஒரு ப்ளாக் டீயை பருகிக்கொண்டு மகிழ்ந்துவிட்டு வரலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்