National Mountain Climbing Day 2024 : மலையேறும் தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?
National Mountain Climbing Day 2024 : மலையேறும் தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா? மலையேறுவது எத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்தது பாருங்கள்.
மலையேற்றம் என்பது பல்வேறு சாகசங்களைக் கொண்ட ஒரு விளையாட்டு ஆகும். சிறப்பான உயரங்களை தொடுவது, நல்ல இடங்களைக் காண்பது, இதையெல்லாம் செய்யும்போது, உங்களுக்கு ஒரு சிறப்பான பணியை செய்து முடித்த திருப்தியை தரக்கூடியதுதான் இந்த மலையேற்றம்.
முதலில் ஒரு பொழுதுபோக்கு அம்சமாகத் தோன்றி, பின்னர் பல ஆண்டுகளில் ஒரு சாகச விளையாட்டாவே இந்த நாள் உருவெடுத்துள்ளது. இந்த நாள் நவீனங்களால் தற்போது மிகவும் சிறப்பான ஒன்றாக மாறியுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள கிளப்கள் மற்றும் குழுக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி இந்த விளையாட்டை சிறப்பான ஒன்றாக மாற்றியுள்ளனர்.
வரலாறு
1898ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வயோமிங்கில் கிராண்ட் டெட்டனின் முதல் வெற்றிகரமான மலையேற்றத்தை கவுரவிக்கும் வகையிலும், நியூயார்க்கில் உள்ள அடிரோண்டாக் மலைகளில் 46ஐ வெற்றிகரமாக அளவிட்ட மலையேறுபவர்கள் பாபி மேத்யூஸ் மற்றும் அவரது நண்பர் ஜோஷ் மடிகன் ஆகியோரை கவரவிக்கும் வகையிலும், தேசிய மலை ஏறும் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
மலை ஏறுபவர்கள் மற்றும் சாகச விரும்பிகள், ஆர்வலர்கள் பெரும்பாலும் மலைகளை ஆராயவும், மலையேறும் நிகழ்வுகளில் பங்கேற்கவும் அல்லது மலைப்பகுதிகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த நாளைப் பயன்படுத்துகின்றனர்.
நாள்
தேசிய மலையேறும் தினம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1898ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, கிராண்ட் டெட்டனின் முதல் வெற்றிகரமான மலையேற்றத்தை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் தேசிய மலை ஏறும் தினம் கொண்டாடப்படுகிறது. கிராண்ட் டெட்டான் வயோமிங்கின் டெட்டான் மலைத்தொடரில் உள்ள மிக உயர்ந்த சிகரமாகும்.
மேலும் இந்த வெற்றிகரமான மலையேறுதல் நதானியேல் "நாட்" லாங்ஃபோர்ட் தலைமையிலான 7 மலையேறுபவர்களைக் கொண்ட குழுவால் நிறைவேற்றப்பட்டது. அவர்கள் டிஎம் பானன், ஜேபி கிராமர், ஜான் ஷிவ், ஃபிராங்க் ஸ்பால்டிங், வில்லியம் ஓவன் மற்றும் பிராங்க்ளின் ஸ்பால்டிங் ஆகியோர் ஆவர்.
வட அமெரிக்காவில் மலையேறுதலின் ஆரம்ப நாட்களில் அவர்களின் சாதனை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். மறுபுறம், பாபி மேத்யூஸ் மற்றும் ஜோஷ் மடிகன் இரட்டையர்கள் ஆகஸ்ட் 1, 2015 அன்று அடிரோண்டாக் மலைகளின் கடைசி சிகரமான ஒயிட் ஃபேஸ் மலையில் ஏறினர்.
முக்கியத்துவம்
தேசிய மலையேறும் தினம் மலையேறுதலில் வரலாறு மற்றும் சாகச உணர்வை நினைவூட்டுகிறது. இது மலையேறுதல் மற்றும் ஆய்வின் சவால்கள் மற்றும் வெகுமதிகளைப் பாராட்ட மக்களை ஊக்குவிக்கிறது,
மலை சூழல்கள், மலைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு முயற்சிகள், வெளிப்புற நடவடிக்கைகளில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் மிக முக்கியமாக மலையேறுதலால் உடல் மற்றும் மனதுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புவணர்வு ஏற்படுத்துகிறது. இது சிலருக்கு பொழுதுபோக்காகவும், சில சாகச விரும்பிகளுக்கு சாகச பயணமாகவும் அமைகிறது.
இந்த நாளை எப்படி கொண்டாடுவது?
மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த நாளை எப்படி கொண்டாடுகிறார்கள் என்றால், இதுவரை மலையேறியவர்களின் வீரதீரத்துக்கு மரியாதை தரும் வகையில், மலையேறுகிறார்கள். மலையேற அதிக முயற்சியும், பயிற்சியும் தேவைபட்டபோதும், இந்த நாளில் கட்டாயம் மலையேறி மகிழுங்கள்.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்