Weight Loss :உடல் பருமனை நிரந்தரமாக குறைக்க இந்த 3 விஷயங்களை பின்பற்றுங்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss :உடல் பருமனை நிரந்தரமாக குறைக்க இந்த 3 விஷயங்களை பின்பற்றுங்கள்

Weight Loss :உடல் பருமனை நிரந்தரமாக குறைக்க இந்த 3 விஷயங்களை பின்பற்றுங்கள்

I Jayachandran HT Tamil
Jun 03, 2023 03:23 PM IST

நிரந்தரமாக உடல் பருமனை குறைக்க பின்பற்ற வேண்டிய 3 விஷயங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் பருமனை நிரந்தரமாக குறைக்க இந்த 3 விஷயங்களை பின்பற்றுங்கள்
உடல் பருமனை நிரந்தரமாக குறைக்க இந்த 3 விஷயங்களை பின்பற்றுங்கள்

உடல் எடையை நிரந்தரமாக குறைக்க சரியான முறையை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உடல் எடை மீண்டும் அதிகரிக்கும்.

எடை இழப்புக்கான முயற்சியை தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே கிலோ கணக்கில் உடல் எடை குறைய வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். 1-2 நாட்களில் எடையை குறைப்பது சாத்தியமல்ல. உடல் எடையை எப்படி ஒரே நாளில் அதிகரிக்க முடியாதோ, அதே போல உடல் எடையையும் 1-2 நாட்களில் குறைத்து விட முடியாது. சீக்கிரமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணத்தில் பலரும் தவறான முறைகளை பின்பற்றுகிறார்கள். தவறான வழிமுறைகளை பின்பற்றுவது, முழுவதுமாக உணவுகளை தவிர்ப்பது, வெயிட் லாஸ் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது சரியான முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு பின்பற்றினால் உடல் பலவீனம் அடைவதை தடுக்கலாம். அதேசமயம் குறைத்த உடல் எடை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான சரியான வழிமுறைகளை உணவியல் நிபுணரான ரிதிமா பாத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிபுணரின் பதிவை இப்போது விரிவாக பார்க்கலாம்.

உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு திட்டத்தை கடைபிடிக்கவும்

ஒவ்வொருவருடைய உடலும் மாறுபட்டது. அதேபோல ஒவ்வொருவருடைய தேவைக்கு ஏற்ப உணவுத் திட்டமும் வடிவமைக்கப் பட வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த, குடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளை உங்கள் உணவு திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைப்பதை மட்டும் இலக்காகக் கொள்ளாமல் வளர்ச்சிதை மாற்றம், மன ஆரோக்கியம், ஹார்மோன்களின் சமநிலை போன்ற விஷயங்களையும் கவனித்து கொள்ள வேண்டும்.

போதுமான தூக்கம் அவசியம்

உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லாத நிலையில் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் நிறைய உள்ளது. இதை தடுக்க இரவு நல்ல தூக்கம் அவசியம்.

மன அழுத்தத்தை தள்ளி வைக்கவும்

சரியான உணவு திட்டத்தை பின்பற்றினாலும் உடல் எடை குறையவில்லையா? இதற்கு மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஏனெனில் மன அழுத்தத்தால் ஹார்மோன் அளவுகள் பாதிக்கப்படும். இதனால் உடல் எடை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். மன அழுத்தத்தால் ஹார்மோன் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானம், பிராணயாமா மற்றும் யோகாசனங்களை செய்யலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.