Beauty Mistakes: ‘இதை மட்டும் செய்திடாதீங்க..’ சொறி, எரிச்சல், அரிப்பு, பருக்கள் ஏற்படலாம்..!
Beauty Mistakes: சரும பராமிரப்பு பொருள்களை பயன்படுத்தும்போது சிலவற்றை ஒன்றாக பயன்படுத்தினால் முகத்தின் பொலிவானது காணாமல் போய்விடும். அந்த வகையில் சரும பராமரிப்பில் செய்யக்கூடாத விஷயங்கள் நிறைய உள்ளன. இந்த தவறுகள் மட்டும் செய்யாமல் இருந்தால் சொறி, எரிச்சல், அரிப்பு, பருக்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

சுய பராமரிப்பு என்று வரும்போது, சரும பராமரிப்புக்கான முக்கியத்தும் அளிப்பதில் பலரும் தொடங்குகிறார்கள். குறிப்பாக பெண்கள் சருமத்தை பேனி காப்பிதில் மெனக்கெடுகிறார்கள். சருமம், தோல்களின் அழகை பராமரிக்க இயற்கையான வழிகளோ அல்லது அழகு சாதன பொருள்களையோ பலரும் பயன்படுத்துகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நபரும் முகத்தில் அழுக்குகளை நீக்கி பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அதற்காக சந்தையில் கிடைக்கும் ஏராளமான அழகு சாதனப் பொருள்களையும் வாங்குகிறார்கள். ஆனால், சருமப் பராமரிப்பில் அழகு சாதனப் பொருட்கள் உணவைப் போலவே செயல்படுகின்றன என்பதை அறிந்தவர்களும், புரிந்துகொண்டிருப்பவர்களும் வெகு சிலரே.
'சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் ஆயுர்வேத சயின்ஸ்' ஆய்வின்படி, எதிரெதிர் குணங்கள் மற்றும் குணம் கொண்ட உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தும். அதே போல, நல்ல குணங்கள் கொண்ட இரண்டு வெவ்வேறு அழகு சாதனப் பொருட்களை முகத்தில் பயன்படுத்தினால், சருமம் எப்போதும் அழகாக இருக்காது.