தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thattai Paruppu Gravy : ருசியாக தட்டைப்பயிறு புளிக்குழம்பு எளிமையாக செய்ய வேண்டுமா?

Thattai Paruppu Gravy : ருசியாக தட்டைப்பயிறு புளிக்குழம்பு எளிமையாக செய்ய வேண்டுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 15, 2023 12:35 PM IST

ருசியாக தட்டைப்பயிறு புளிக்குழம்பு எளிமையாக செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

தட்டை பயிறு புளி குழம்பு
தட்டை பயிறு புளி குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

தட்டை பயிறு

எண்ணெய்

கடுகு

உளுந்தம்பருப்பு

வெந்தயம்

சின்ன வெங்காயம்

தக்காளி

கறிவேப்பிலை

பெருங்காயம்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

மல்லி தூள்

புளி

தேங்காயய்

சோம்பு

கத்தரிக்காய்

முருங்கை காய்

உப்பு

விளக்கு எண்ணெய்

செய்முறை

தட்டை பயிறை ஒரு வாணலியில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த தட்டை பயிறை குக்கரில் சோர்த்து நான்கு விசில் வைத்து இறக்கி கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும்.

அதில் அரைஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து பொரிய விட வேண்டும். வெந்தயம் பொரிந்த பிறகு அதில் அரைஸ்பூன் கடுகு உளுந்தம்பருப்பை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சிவந்த பிறகு அதில் ஒரு பழுத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி வதங்கிய பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் வெட்டி வைத்த கத்தரிக்காய் மற்றும் முருங்கை காயை சேர்த்து வேக விட வேண்டும். கத்தரிக்காய் வேக ஆரம்பித்த உடன் அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், 3 ஸ்பூன் மல்லித்தூளை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலா தூள்களை கலந்துவிட வேண்டும் . பின்னர் எலுமிச்சை அளவு ஊற வைத்த புளியை கரைத்து சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் 100 கிராம் அளவு தேங்காய் 5பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் வேக வைத்த தட்டை பயிறு ஒரு ஸ்பூன் சோம்பு, 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். கத்தரிக்காய், முருங்கைகாய் ஓரளவு வெந்த பிறகு மிக்ஸை கொதிக்கும் குழம்பில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் வேகவைத்த தட்டை பயிறையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின்னர் நன்றாக குழம்பில் மசால் பொடி மற்றும் தேங்காயின் பச்சை வாடை போன பிறகு இறக்கலாம். குழம்பு கெட்டியான பிறகு இறக்குவதற்கு முன் அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். ருசி அருமையாக இருக்கும்.

சூடான சாதம், சப்பாத்தி, தோசை, இட்லிக்கு இந்த குழம்பு நன்றாக இருக்கும். இதில் போட்ட காய்கறிகளுடன் பயிறு சேர்த்து பழையசோறு சர்ப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்