Stuffed Brinjal Fry : பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stuffed Brinjal Fry : பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய்!

Stuffed Brinjal Fry : பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய்!

Priyadarshini R HT Tamil
Jan 14, 2024 01:00 PM IST

Oil Brinjal Fry : பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய்!

Stuffed Brinjal Fry : பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய்!
Stuffed Brinjal Fry : பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய்!

கத்தரிக்காய் – 4

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

ஸ்டஃபிங் செய்வதற்கு தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – 2 ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

கறி மசாலா – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்

நிறைய மசாலா தேவையெனில் இந்த அளவுகளை அப்படியே அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை

கழுவி சுத்தம் செய்த கத்தரிக்காய்களை நாலாக வகுந்துகொள்ள வேண்டும். காம்பு இருக்கும் பக்கத்தில் எதிர்பக்கத்தில் வகுந்துகொள்ள வேண்டும். இது அந்த ஸ்டஃபிங்கை சேகரிக்க போதுமானது. கத்தரிக்காயின் வடிவமும் அதே நேரத்தில் மாறிவிடக்கூடாது.

கடலை பருப்பு, உளுந்து, சீரகம் என அனைத்தையும் பொன்னிறமாகம் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்க வேண்டும். அனைத்தும் நன்றாக வறுபடவேண்டும்.

வறுத்த அனைத்தையும், உப்பு சேர்த்து பொடியாக பொடித்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கறி மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் என அனைத்தும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பொடி நன்றாக வறுபடவில்லையெனில், சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடி அல்லது பேஸ்டை கத்தரிக்காயின் உள்ளே வைத்து நன்றாக ஸ்டஃப் செய்யவேண்டும்.

அடிக்கனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் கறிவேப்பிலையை தூவ வேண்டும். ஸ்டஃப் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

எஞ்சிய பொடி இருந்தால், அதையும் அந்த கடாயில் சேர்க்க வேண்டும். அதை மூடி குறைவான தீயில் வேகவிடவேண்டும்.

அவ்வப்போது அதை பிரட்டி அனைத்துபுறங்களிலும் அது நன்றாக வேகுமளவுக்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

10 முதல் 15 நிமிடங்கள் கத்தரிக்காயை வறுக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் கத்தரிக்காயை இறக்க வேண்டும்.

குறிப்பு

சாதம், சப்பாத்தி, பிரியாணி அல்லது புலாவ் என எதனுடன் வேண்டுமானாலும் இதை சேர்த்து உண்ணலாம்.

கத்தரிக்காயின் நன்மைகள்

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.

ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது. இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.