Online Dating: இனி ஆன்லைன் டேட்டிங் தான் கரெக்ட் சாய்ஸ்! இது தான் இப்போ டிரெண்ட்!
Online Dating: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் டேட்டிங் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இது மக்களுடன் இணைவதற்கான பொதுவான வழியாகும். இதில் கிடைக்கும் அனுபவம் நபருக்கு நபர் மாறுபடும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் டேட்டிங் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இது மக்களுடன் இணைவதற்கான பொதுவான வழியாகும். இதில் கிடைக்கும் அனுபவம் நபருக்கு நபர் மாறுபடும். சிலர் ஆன்லைன் டேட்டிங்கை முழுவதுமாக நம்பி அதில் வாழ்க்கையை செலவிடுகின்றனர். மற்றவர்கள் அர்த்தமுள்ள இணைப்புகளை மட்டும் கண்டறிகிறார்கள். இணைய உளவியல், நடத்தை மற்றும் சமூக வலைப்பின்னல் ஆகியவை தொடர்ப்பாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஆன்லைன் தளங்களில் சந்தித்த ஜோடிகளின் உறவு இயக்கவியல் நேரடியாக சந்தித்தவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து விளக்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் உறவின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன எனக் கூறப்படுகிறது.
ஆன்லைன் டேட்டிங்
ஆன்லைனில் சந்திக்கும் திருமணமான தம்பதிகளுக்கு, இந்த முறை சரிபட்டு வருவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால் தம்பதியினர் சமூக ஊடகங்களில் தங்கள் உறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை அல்லது விவாதிக்கவில்லை என்றால் மட்டுமே அவர்களின் மாற்று நபர் உடனான உறவு வெற்றி அடைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மாறாக, தங்கள் உறவு குறித்து வெளிப்படையாக அனுபவங்களை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஜோடிகளுக்கு இடையே வெற்றியில் பெரிய வித்தியாசம் இல்லை.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உறவுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் சமூக ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்பதை இது குறிக்கிறது. இது இருவர் தங்கள் சமூக வலைப்பின்னல்களுடன் இணைவதற்கு ஒரு தளத்தை வழங்குகிறது. ஆன்லைன் டேட்டிங்கில் இருந்து தொடங்கிய உறவு, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போது மிகவும் வெற்றிகரமானது. சமூக ஊடகங்களில் தங்கள் உறவைப் பற்றி பதிவுகள் இடுவதன் மூலம், தம்பதிகள் தங்கள் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் சமூக ஆதரவின் உணர்வை அனுபவிக்க முடியும். பாரம்பரியமாக ஆஃப்லைன் உறவுகளில் கிடைக்கும் நண்பர்களின் ஆதரவை சமூக ஊடகங்கள் கொண்டு வருவதால், அவர்கள் துண்டிக்கப்பட்டதாக உணரவில்லை. இந்த சமூக ஆதரவு ஆலோசனையாகவோ அல்லது பாராட்டுக்களாகவோ இருக்கலாம். திருமணமாகாத தம்பதிகளுக்கு, ஆன்லைன் டேட்டிங் உயர் உறவு வெற்றியுடன் தொடர்புடையது, ஆனால் மீண்டும், சமூக ஊடகங்களில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு மட்டுமே இது உண்மையான ரிசல்ட் ஆக கிடைக்கும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
நுணுக்கமான புரிதல்
டிஜிட்டல் யுகத்தில் டேட்டிங்கின் நுணுக்கமான தன்மையை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. சமூக ஊடகங்கள் சமூக ஆதரவின் ஆதாரமாக செயல்படுகின்றன. இந்த உறவுகளின் வெற்றியானது, அந்தத் தம்பதிகள் எப்படிச் சந்திக்கிறார்கள் என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால் சமூக ஊடகங்களுடனான ஒரு ஜோடியாக அவர்களது பிணைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுகிறது. சமூக வலைப்பின்னலின் சமூக ஆதரவைப் பயன்படுத்தும்போது ஆன்லைன் டேட்டிங் அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் சமூக வலைப்பின்னலுடன் தொடர்புகளைப் பேணுவது உறவு திருப்தியை மேம்படுத்துவதில் முக்கியமாகத் தோன்றுகிறது, குறிப்பாக ஆன்லைனில் சந்திக்கும் தம்பதிகளுக்கு. 'ஆன்லைன் டேட்டிங் மோசமான உறவுகளுக்கு வழிவகுக்கிறது' என்று வெறுமனே நம்புவது பிழையானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த மாதிரி ஆன்லைனில் கிடைக்கும் உறவின் வெற்றி மிகவும் நுணுக்கமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்