Benefits of Vegetable Skin: காய்கறிகளின் தோல்களில் ஒளிந்திருக்கும் தாராள ஊட்டச்சத்துகள்! இனி தவறியும் வீசி விடாதீர்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Vegetable Skin: காய்கறிகளின் தோல்களில் ஒளிந்திருக்கும் தாராள ஊட்டச்சத்துகள்! இனி தவறியும் வீசி விடாதீர்கள்

Benefits of Vegetable Skin: காய்கறிகளின் தோல்களில் ஒளிந்திருக்கும் தாராள ஊட்டச்சத்துகள்! இனி தவறியும் வீசி விடாதீர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 11, 2023 09:02 PM IST

நாம் அன்றாடம் சாப்பிடும் பல காய்கறிகளின் தோல்களில் ஏராளமான ஊட்டச்சத்துகள் ஒளிந்துள்ளன. காய்கறிகளின் தோல்களில் இருக்கும் சத்துக்களால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலா

ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும் காய்கறிகளின் தோல்கள்
ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும் காய்கறிகளின் தோல்கள்

இதேபோல் சில காய்கறி வகைகளையும் தோல்களை நீக்காமல் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும் விதமாக கூடுதல் ஊட்டச்சத்துகளை பெறலாம். இதை செய்ய தவறினால் தோல்களில் கிடைக்கும் சத்துகளை நாம் மிஸ் செய்ய நேரிடும்.

காய்கறிகளின் தோல்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் உள்பட பல்வேறு அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. ஆனால் இதை பற்றி எண்ணம் சிறிதும் இல்லாமல் அதை நீக்கும் பழக்கம் பலரும் இருந்து வருகிறது. அதிக ஊட்டச்சத்துகள் நிரம்பியிருக்கும் தோல்களை கொண்டிருக்கும் காய்கறிகளை எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உருளை கிழங்கு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் காய்கறியாகவும், உலகம் முழுவதும் பரவலாக கிடைக்கும் காய்கறியாக இருந்து வரும் உருளைக்கிழங்கின் தோல்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.

இந்த காய்கறியின் தோலில் இடம்பிடித்திருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்துக்கு, தசை செயல்பாட்டுக்கும் அடிப்படையாக உள்ளது.

இதுமட்டுமில்லாமல் இரும்பு சத்துகளும் இதில் நிறைந்திருப்பதால் சிவப்பு ரத்து அணுக்கள் செயல்பாட்டை ஆதரிக்கிறது. எனவே உருளைக்கிழங்கில் உள்ள தோல்களை நீக்காமல் சமைப்பதன் மூலம் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. ஆனால் அவற்றை சமைப்பதற்கு முன், அதன் தோல்களில் இருக்கும் அனைத்து அழுக்குகளையும் அகற்றுவதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

கேரட்

உருளைக்கிழங்கு போல் கேரட்டும் அதிகமாக விரும்பி சாப்பிடும் காய்கறி வகைகளில் ஒன்றாக உள்ளது. மிகவும் மெல்லதாக இருக்கும் கேரட் தோல்கள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பி3, நார்ச்சத்து, பைட்டோநியூட்ரியன்களை கொண்டிருக்கும் கேரட் நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகறிக்கிறது. இதன் மூலம் சரும ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறன் பராமரிக்கப்படுகிறது.

கேரட்டில் இடம்பிடித்திருக்கும் பீட்டா கரோடீன் செரிமானத்தை மேம்படுத்தி, ஒட்டு மொத்த உடல் நலத்தை பேனி பாதுகாக்கிறது

வெள்ளரி காய்

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய தோல்களை நீக்கி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் அதன் தோல்கள் நார்ச்சத்துகள், வைட்டமின்கள், தாதுக்களால் நிரம்பியுள்ளன. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், ரத்தம் உறைவதை தடுக்கும் பணியை மேற்கொள்ளும் வைட்டமின் கே நிறைந்துள்ளது. சிலிக்கா என்ற சேர்மானத்தின் ஆதாரமாக திகழ்கிறது. இவை சருமம், தலைமுடி, நகங்களில் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது.

கத்தரிக்காய்

இதில் இடம்பிடித்திருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டாக இருந்து நாசுனின், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து மூளை செல்களைப் பாதுகாக்கிறது. அத்துடன் கத்திரிக்காயில் இடம்பிடித்திருக்கும் நார்ச்சத்து செரிமானத்துக்கு வழிவகுத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. அதேபோல் சரும ஆரோக்கியத்துக்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.