தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Sprouts In Tamil: A Guide To Daily Sprouted Grains &Amp; Their Benefits"

Sprouts In Tamil: உண்மையில் முளைக்கட்டிய தானியங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருமா? உண்மை என்ன? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Mar 12, 2024 06:30 AM IST

”Sprouted Grains: உங்கள் தினசரி உணவில் முளைக்கட்டிய தானியங்களைச் சேர்த்து கொள்வது, உங்கள் உடலில் ஊட்டச்சத்தை உயர்த்துவதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் எளிய செயல்முறையாகவும் விளங்குகிறது”

முளைக்கட்டிய தானியங்கள்
முளைக்கட்டிய தானியங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

முளைக்கட்டிய தானியங்களை செய்யும் முறை? 

தானியங்களின் தேர்வு

பச்சைப்பயறு, நிலக்கடலை, மூக்கடலை, காரா மணி, கொள்ளு, கோதுமை, கம்பு, சோளம், வெந்தயம் உள்ளிட்ட தானியங்களில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.

நீரில் ஊறவைத்தல் 

தேர்ந்தெடுக்கப்பட்ட தானியங்களை குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். பின்னர் ஒரு பெரிய கிண்ணத்தில் நன்கு கழுவிய தானியங்களை சுத்தமான தண்ணீறில் ஊற்றி  8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும். 

வடிக்கட்டுத்தல் 

ஊறவைத்த பிறகு, மெல்லிய துணி அல்லது வடிக்கட்டியை பயன்படுத்தி தானியங்களில் இருந்து தண்ணீரை வடிகட்டவும். 

முளைத்தல்

நீரில் வடிகட்டிய தானியங்களை சுத்தமான துணியில் மாற்றி, காற்று சுழற்சியை அனுமதிக்க அவற்றை சமமாக பரப்பி வைத்தால் அதில் இருந்து சத்து மிக்க முளைத்த தானியங்கள் கிடைக்கும்.

முளைக்கட்டிய தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முளைக்கட்டிய தானியங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள்

முளைக்கட்டிய தானியங்களில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளேக்ஸ் (ஃபோலேட், நியாசின் மற்றும் ரிபோஃப்ளே), வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்கின்றன.

தாதுக்கள்

முளைக்கட்டிய தானியங்களில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆதிகரிக்கவும் உதவுகிறது. 

புரதம்

முளைக்காத தானியங்களுடன் ஒப்பிடும்போது முளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரதம் உள்ளது. முளைக்கும் செயல்முறையானது சிக்கலான புரதங்களை எளிய அமினோ அமிலங்களாக உடைக்கும் நொதிகளை உண்டாக்குகிறது. இது எளிதாக செரிமானம் ஆக உதவுகிறது. புரதக் குறைப்பாட்டால் முடி உதிர்வு பிரச்னையை சந்திப்பவர்களுக்கு ஊட்டம் அளிக்கும் உணவாக முளைக்கட்டிய தானியங்கள் உள்ளது. 

நார்ச்சத்து

முளைக்கட்டிய தானியங்களில் உணவு நார்ச்சத்துக்கள் நிரம்பி உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மேலும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-

முளைக்கட்டிய தானியங்கள் முளைக்கும் செயல்பாட்டின் போது என்சைம்கள் செயல்படுவதால் எளிதில் ஜீரணமாகும் தன்மையை அளிக்கிறது. இது செரிமான பிரச்சினைகள் உள்ள நபர்களுக்கு தீர்வு கொடுக்கும் உணவாக உள்ளது. 

முளைக்கட்டிய தானியங்களில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்கள் நிலையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் சோர்வை எதிர்த்துப் போராடும் ஆற்றலை கொடுக்கிறது. 

கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் உடல் எடை மேலாண்மைக்கு தேவைப்பட கூடிய முக்கிய உணவுப்பொருளாக முளைக்கட்டிய தானியங்கள் உள்ளது. 

இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்று மற்றும் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகிறது.

உங்கள் தினசரி உணவில் முளைக்கட்டிய தானியங்களைச் சேர்த்து கொள்வது, உங்கள் உடலில் ஊட்டச்சத்தை உயர்த்துவதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிக்கும் எளிய செயல்முறையாகவும் விளங்குகிறது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

ட்விட்டர்: https://twitter.com/httamilnews 

பேஸ்புக்: https://www.facebook.com/HTTamilNews 

யூடியுப்: https://www.youtube.com/@httamil 

கூகுள் நியூஸ்: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்