Smoky Red Chicken : டிரண்டாகிவரும் ஸ்மோக்கி உணவுகள்! அதில் ரெட் சிக்கன் செய்து சாப்பிடலாமா?
Smoky Red Chicken : டிரண்டாகிவரும் ஸ்மோக்கி உணவுகள்! அதில் ரெட் சிக்கன் செய்து சாப்பிடலாமா?
தேவையான பொருட்கள்
சிக்கன் – ஒரு கிலோ
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைபழச்சாறு - 1 பழத்தை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் – ஒன்றரை ஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் – ஒன்றரை ஸ்பூன்
கரி - 8 10 துண்டுகள்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
செய்முறை
சிக்கனில் சிறு சிறு கீறல்கள் போட்டு, அதில் உப்பு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து அகலமான கடாயில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவேண்டும்.
பின்னர் மறுபக்கம் திருப்பிவிட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவேண்டும்.
பிறகு மறுபக்கம் திருப்பி விட்டு சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றி வரும் வரை கடாயை மூடி நன்றாக வேகவிடவேண்டும்.
அடுத்து கிரில் கடாயில் எண்ணெய் ஊற்றி எல்லா பக்கமும் தடவவேண்டும்.
பின்னர் வேகவைத்த சிக்கனை வைத்து குறைந்த தீயில் சிக்கனின் மீது சிறுதளவு எண்ணெய் தடவவேண்டும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் கரியை சுட்டு வைத்து, அதை கடாயின் நடுவில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி கடாயை மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் ஸ்மோக் செய்யவேண்டும்.
ஸ்மோக்கி ரெட் சிக்கன் தயார்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரையும் கவரும் ஒரு சூப்பர் உணவாக இருக்கும்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மனஅழுத்தத்துக்கு மருந்து
சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது
வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.
சாப்பிடுவதற்கு எளிதானது
சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.
சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது
இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
எலும்பை வலுப்படுத்துகிறது
இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
எடை இழக்க உதவுகிறது
புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.
சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்