Sleeping Tips : இரவில் இந்தப்பழங்களை மட்டும் எடுத்தால் போதும்! கும்கர்ணனுக்கே டஃப் கொடுக்குமளவுக்கு தூக்கம் துரத்தும்!
Sleeping Tips : இரவில் இந்தப்பழங்களை மட்டும் எடுத்தால் போதும்! கும்கர்ணனுக்கே டஃப் கொடுக்குமளவுக்கு தூக்கம் துரத்தும்!
இந்தப்பழங்கள் உங்கள் உறக்கத்துக்கு எவ்வாறு உதவுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் பழங்கள்
உங்களால் நிம்மதியாக இரவில் ஆழ்ந்து உறங்க முடியவில்லையா? எனில் இந்தப்பழங்களை நீங்கள் உறங்கச்செல்வதற்கு முன் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்துக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறீர்களா?
அதனுடன் சேர்ந்து இந்தப்பழங்களையும் எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு நன்மை கொடுக்கும். இவை நல்ல ஸ்னாக்ஸ்கள் மட்டுமல்ல உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுப்பதுடன், உங்களுக்கு ஆரோக்கியமான உறக்கத்தையும் வழங்குகிறது.
வாழைப்பழங்கள்
எளிதில் கிடைக்கக்கூடிய பழங்கள், உங்கள் வீட்டிற்கு அருகிலேயே வாங்கிக்கொள்ளலாம். இதை ஒரு ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்வதும் நல்லது. இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அது உங்களின் தசைகளை அமைதிப்படுத்துகிறது.
இதில் உள்ள டிரிப்டோஃபான்கள், உங்கள் உடலில் செரோட்டினின் சுரப்பை தூண்டுகிறது. செரோட்டினின் உங்களுக்கு மகிழ்ச்சியைக்கொடுக்கும் ஹார்மோன் ஆகும். உங்கள் மூளையை மயக்கி உங்களுக்கு ஒரு தரமான உறக்கத்தை கொடுக்கும்.
செரி பழங்கள்
செரி பழங்கள், குறிப்பாக உறக்கத்தின் தரத்தையும், நேரத்தையும் அதிகரிப்பவை ஆகும். இதில் உள்ள மெலாடொனின் என்ற உட்பொருள், உங்களுக்கு அமைதியைக் கொடுக்கிறது. செரி பழச்சாறுகளை நீங்கள் உறங்கச்செல்வதற்கு முன் எடுத்துக்கொண்டால், உங்களுக்கு அமைதியான உறக்கம் கிடைக்கும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழங்கள், உடலில் உள்ள ப்ரோமெலைன்களுக்கு ஊக்கமளிக்கிறது. இந்த என்சைம்களில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள், உங்கள் உடலில் உள்ள தசைகளை அமைதிப்படுத்துகிறது. எனினும், இதில் மெலாட்டோனின், வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவையனைத்தும் உங்கள் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சி முறையாக நடைபெற ஊக்குவிக்கும்.
கிவி
சிறிய பழம்தானே என்று இதை குறைத்து மதிப்பிட வேண்டாம். இதில் வைட்டமின் சி மற்றும் செரோட்னின் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால், உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனவே தினமும் மாலையில் இதை சாப்பிட்டு, இரவு நல்ல, ஆழ்ந்த உறக்கத்தை அனுபவியுங்கள்.
ஆரஞ்சு
ஆரஞ்சுகள் என்றாலே வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்ததுதான் என்று பொருள். இதில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இவை நீங்கள் உறங்க செல்வதற்கு முன்னரே உங்களை ஆழ்ந்த உறக்கத்துக்கு அழைத்துச்செல்ல தயார்படுத்துகிறது. எனவே தினமும் இரவு உறங்கச்செல்லும் முன் ஒரு ஆரஞ்சு பழத்தை அறித்து சாப்பிடுங்கள். அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கிறது.
பப்பாளி
பப்பாளிகள் சுவை நிறைந்த உணவு மட்டுமல்ல, இதில் வைட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஃபோலேட் மற்றும் பொட்டாசிய சத்துக்களும் உள்ளது. எனவே உறங்கச்செல்வதற்கு முன் கொஞ்சம் பப்பாளி பழங்களை சாப்பிடுவது, உங்களை அமைதிப்படுத்தும். உங்கள் உடலை உறக்கத்துக்கு தயார்படுத்தும்.
ஆப்பிள்
ஆப்பிள் நாம் தினசரி சாப்பிட வேண்டிய ஒரு உணவு. பல்வேறு ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்கிறது. இது முன்னர் குறிப்பிடப்பவில்லை. ஆனால் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்துக்கள், அவற்றை ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான படுக்கை நேர ஸ்னாக்காக எடுத்துக்கொள்ள உதவுகிறது. எனவே நீங்கள் படுக்கச்செல்லும் முன் உங்களுக்கு சாப்பிடவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டால், நீங்கள் இந்தப்பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்